மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மணப்பாறையில், அதிமுக இளைஞர், இளம்பெண்கள் பாசறை உறுப்பினர் சேர்க்கை முகாம்

திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் முகாமை துவக்கி வைத்தனர்.

News image
அதிமுக இளைஞர், இளம்பெண்கள் பாசறை உறுப்பினர் சேர்க்கை முகாம்.
Updated On :20 செப்டம்பர் 2020, 10:50 am

DIN

திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் முகாமை துவக்கி வைத்தனர்.

மணப்பாறையில், நகராட்சிக்குட்பட்ட 6,13 மற்றும் 24-வது வார்டுகளில் இளைஞர், இளம்பெண்கள் பாசறை உறுப்பினர் சேர்க்கை முகாம் ஆங்காங்கே அமைக்கப்பட்டிருந்த விழா மேடைகளில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திருச்சி மாவட்டம், மணப்பாறை அதிமுக நகர செயலாளர் பவுன்.ராமமூர்த்தி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஏ.டி.ஏஸ்.ராமசந்திரன், பத்தி பாஸ்கர், இளையநிலா செல்வம் ஆகியோர் முன்னிலையில் வகித்தனர். 

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், திருச்சி தெற்கு மாவட்ட செயலாளருமான ப.குமார், சட்டப்பேரவை உறுப்பினர் ஆர்.சந்திரசேகர், மாவட்ட இளைஞர், இளம்பெண்கள் பாசறை செயலாளர் வி.டி.எம்.அருண்நேரு ஆகியோர் முகாமை துவக்கி வைத்தனர். அந்தந்த வார்டுகளில் உள்ள 3 பூத்களுக்கு தலா 25 பேர் என்றும் அதில் 15 பேர் நிர்வாகிகளாகவும் இளைஞர், இளம்பெண்கள் பாசறைக்கு தேர்வு செய்யப்பட்டனர். 

அவர்களுக்கு இளைஞர், இளம்பெண்கள் பாசறையின் புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான படிவங்கள் வழங்கப்பட்டது.  நிகழ்ச்சிக்கு வந்திருந்த மாவட்ட செயலாளர் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினருக்கு மாரியம்மன் கோயில் பகுதியிலிருந்து நிகழ்ச்சி மேடை வரை சுமார் 100-க்கும் மேற்பட்ட கட்சி தொண்டர் இருச்சக்கர வாகனத்தில் பேரணியாக முன் சென்று வரவேற்பு அளித்தனர். முகாமில் மாற்று கட்சியிலிருந்து தொண்டர் அதிமுகவில் தங்களை இணைத்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.