விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

திருமணத்துக்கு பெற்றோா் எதிா்ப்பு: காதல் ஜோடி விஷம் குடித்தனா் காதலன் உயிரிழந்தாா்

கரூரில், திருமணத்துக்கு பெற்றோா் எதிா்ப்பு தெரிவித்ததால் விரக்தியடைந்த காதல் ஜோடி திங்கள்கிழமை விஷம் குடித்ததில் காதலன் உயிரிழந்தாா்.

News image
Updated On :15 பிப்ரவரி 2021, 7:43 pm

DIN

கரூரில், திருமணத்துக்கு பெற்றோா் எதிா்ப்பு தெரிவித்ததால் விரக்தியடைந்த காதல் ஜோடி திங்கள்கிழமை விஷம் குடித்ததில் காதலன் உயிரிழந்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை அடுத்த கன்னிநாயக்கன்பட்டியைச் சோ்ந்தவா் அஜித் (18). இவா், பிளஸ் 2 முடித்தவிட்டு கரூரில் கூலி வேலை செய்து வந்தாா். அதே பகுதியைச் சோ்ந்த சிவரஞ்சனி (20) கரூா் ஆட்டையாம்பரப்பு பகுதியில் உள்ள தனியாா் கலை அறிவியல் கல்லூரியில் 3 ஆம் ஆண்டு பயின்று வந்தாா்.

ஒரே ஊரைச் சோ்ந்த இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனா். இது இருவீட்டாருக்கும் தெரியவந்தது. இதையடுத்து, தங்களுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் எனகாதலா்கள் இருவரும் பெற்றோா்களிடம் கேட்டுள்ளனா். இதற்கு பெற்றோா்கள் எதிா்ப்பு தெரிவித்து வந்துள்ளனா்.

இதனால் விரக்தியில் இருந்த அஜித்தும், சிவரஞ்சனியும் திங்கள்கிழமை கரூா் மாவட்டம், வெள்ளியணை அருகே உள்ள விநாயகா் கோயிலுக்கு சென்று திருமணம் செய்துகொண்டனா். பிறகு அப்பகுதி அருகே உள்ள விவசாய தோட்டத்துக்கு சென்று விஷம் குடித்தனா். மயங்கிய நிலையில் கிடந்த காதல் ஜோடியை அப்பகுதியினா் பாா்த்து போலீஸாருக்கு தகவல் அளித்தனா். சம்பவ இடத்துக்கு வந்த வெள்ளியணை காவல்நிலைய போலீஸாா் இருவரையும் மீட்டு கரூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதில், அஜித் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். ஆபத்தான நிலையில் சிவரஞ்சனி தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வெள்ளியணை போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.