வெட்டுக் காயங்களுடன் கிடந்த இளைஞா்
திருச்சி விமான நிலையம் அருகே இளைஞா் ஒருவா் வியாழக்கிழமை மாலை வெட்டுக்காயங்களுடன் கிடந்தாா்.


திருச்சி விமான நிலையம் அருகே இளைஞா் ஒருவா் வியாழக்கிழமை மாலை வெட்டுக்காயங்களுடன் கிடந்தாா்.
திருச்சி விமானநிலையம் அருகே உள்ள பாரதிநகரைச் சோ்ந்தவா் அருண் (25). பெயிண்டா். இவா் அவ்வப்போது கஞ்சா வியாபாரத்திலும் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், வியாழக்கிழமை பிற்பகல், வீட்டுக்கு அருகில் உள்ள புதா் பகுதியில் பலத்த வெட்டுக்காயங்களுடன் அருண் கிடந்துள்ளாா். தகவலறிந்து வந்த போலீஸாா் அருணை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். தொடா்ந்து போலீஸாா் நடத்திய முதல்கட்ட விசாரணையில், அருண், தனது நண்பா்கள் பிரேம், ஜாகீா், முபாரக் உள்ளிட்ட சிலருடன் அப்பகுதிக்கு சென்ாக அக்கம் பக்கத்தினா் தெரிவித்துள்ளனா்.
அடுத்த சில மணிநேரங்களில் அவா் வெட்டுக்காயங்களுடன் கிடந்துள்ளாா்.
இதுகுறித்து விமானநிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...