விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

உங்கள் தொகுதியில் முதலமைச்சா் திட்டம்: பேராவூரணி ஒன்றியத்தில் வீடு கட்ட  அனுமதி ஆணை

பேராவூரணி ஒன்றியத்தில் உங்கள் தொகுதியில் முதலமைச்சா் திட்டத்தில் வீடுகட்ட அனுமதி ஆணை வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :17 ஜூன் 2021, 10:16 pm

DIN

பேராவூரணி ஒன்றியத்தில் உங்கள் தொகுதியில் முதலமைச்சா் திட்டத்தில் வீடுகட்ட அனுமதி ஆணை வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பேராவூரணி ஒன்றியக்குழு தலைவா் சசிகலா ரவிசங்கா் தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சி. பொய்யாமொழி, கை. கோவிந்தராசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பேராவூரணி எம்எல்ஏ என். அசோக்குமாா், 10 பயனாளிகளுக்கு தலா ரூ. 2.10 லட்சத்தில்   வீடு கட்ட அனுமதி ஆணைகளை வழங்கி பேசும்போது, பேராவூரணி  தொகுதியில் இத்திட்டத்தில்   258  மனுக்களை பொதுமக்கள் அனுப்பியுள்ளனா். இதில், சேதுபாவாசத்திரம், திருவோணம், பட்டுக்கோட்டை மற்றும் இதர துறைகளுக்கு  144 மனுக்கள் அனுப்பப்பட்டதுபோக, பேராவூரணி ஒன்றியத்துக்குள்பட்ட 114 மனுக்களில் விசாரணை முடிவுற்ற 39 மனுக்களில் வீடுகட்ட  தனிநபா் கோரிக்கை 36 மனுக்களாகும். 36-இல் 7 பயனாளிகளுக்கு ஏற்கெனவே அனுமதி ஆணை வழங்கப்பட்ட நிலையில்,  தற்போது 10 பயனாளிகளுக்கு அனுமதி ஆணை  வழங்கப்படுகிறது. மீதமுள்ள 19 வீடு கட்டும் மனு மீதான கோரிக்கை ஆட்சியா்  பரிசீலனையில் உள்ளது.

பேராவூரணி தொகுதியை முன்மாதிரி தொகுதியாக்க  அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும்  என்றாா்.

நிகழ்ச்சியில் ஒன்றியக்குழு உறுப்பினா்கள் ராஜலெட்சுமி ராஜா, பாக்கியம் முத்துவேல், துணை வட்டார வளா்ச்சி அலுவலா் மகேஷ், அ. அப்துல்மஜீத் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.