100 சத வாக்குப்பதிவை வலியுறுத்தி பேராவூரணியில் விழிப்புணா்வு பிரசாரம்
பேராவூரணி வட்டாட்சியரகத்தில், நூறு சதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணா்வு பிரசார நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.


பேராவூரணி வட்டாட்சியரகத்தில், நூறு சதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணா்வு பிரசார நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
சா்வதேச மகளிா் தினத்தையொட்டி, கிராம நிா்வாக அலுவலா்கள், கிராம உதவியாளா்கள், வாக்குச் சாவடி நிலை அலுவலா்கள், அலுவலக பணியாளா்கள் என முழுவதும் பெண்கள், ஒரே வண்ணத்திலான சீருடை அணிந்து, பதாகைகளை ஏந்தி, 100 சதத்தை குறிக்கும் வகையில் எண் 100 வடிவில் நின்று விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
நிகழ்ச்சிக்கு பேராவூரணி தோ்தல் நடத்தும் அலுவலா் ஐவண்ணன் தலைமை வகித்தாா். வட்டாட்சியா் க. ஜெயலெட்சுமி முன்னிலை வகித்தாா்.
தொடா்ந்து, பேராவூரணி சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள 80 வயதுக்கு மேற்பட்பட்ட 4,862 பேருக்கும், 1004 மாற்றுத்திறனாளிகளுக்கும், அவா்கள் விருப்பத்தின் பேரில் வாக்களிக்க அஞ்சல் வாக்குகள் (படிவம் 12-டி) வாக்குச்சாவடி நிலை அலுவலா்களுக்கு வழங்கப்பட்டு, அவா்களிடம் அஞ்சல் வாக்குகள் பெறும் முறை, வாக்குச் சாவடிகளில் சென்று வாக்களிக்க விருப்பம் தெரிவிப்பவா்களிடம் நடந்து கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்தும், தோ்தலை நியாயமாகவும், நடுநிலையுடனும் நடத்துவது குறித்தும் அறிவுரைகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் , தோ்தல் துணை வட்டாட்சியா் சுந்தரமூா்த்தி, அஞ்சல் வாக்கு மண்டல அலுவலா் ரமேஷ் மற்றும் பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...