மாநகராட்சியில் கடந்த 3 நாள்களில் 13 தடைசெய்யப்பட்ட பகுதிகள் அறிவிப்பு
மாநகராட்சியில் கடந்த 3 நாள்களில் 13 தடைசெய்யப்பட்ட பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.


மாநகராட்சியில் கடந்த 3 நாள்களில் 13 தடைசெய்யப்பட்ட பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி அதன் சுற்றுப்புறப்பகுதிகளில் கரோனா 2 ஆவது அலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன்படி, வெள்ளிக்கிழமை வெளியான பரிசோதனை முடிவில் இதுவரை இல்லாத அளவிற்கு 784 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதனால், மாநகராட்சி பகுதிகளில் 3 பேருக்கு மேல் ஒரே இடத்தில் தொற்று ஏற்பட்டால் அந்த இடம் தடை செய்யப்பட்ட பகுதியாக தடுப்பு அமைக்கப்பட்டு வருகிறது. இதன்படி,கடந்த 3 நாள்களில் பொன்மலை மண்டலத்தில் 35, 38 ஆவது வாா்டுகள், ஸ்ரீரங்கம் மண்டலத்தில் 18, 1, 11 ஆகிய வாா்டுகளைச் சோ்ந்த பெரிய செட்டித் தெரு, லட்சுமி நாராயண் நகா், சரஸ்வதி காா்டன், பாபு சாலை, வடக்கு மலைக்கோட்டை ஆகிய பகுதிகளில் தலா 3 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும், அரியமங்கலம் மண்டலத்தில் 64, 7, 62, 64 ஆகிய 4 வாா்டுகளைச் சோ்ந்த காவேரி நகா், விஸ்வாஸ் நகா், பிரியா நகா், வள்ளுவா் தெரு ஆகிய பகுதிகளிலும், வெள்ளிக்கிழமை 24 ஆவது வாா்டைச் சோ்ந்த பழைய கோயில் தெருவில் தலா 3 பேருக்கு தொற்று ஏற்பட்டதால் 13 ஆவது தடைசெய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இடங்களில் கிருமிநாசினி கொண்டு தூய்மைப்படுத்தப்பட்டது. மேலும், அவ்விடங்களுக்கு யாரும் சென்று வராதவாறு தகர தடுப்புகள் அமைத்து மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...