கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

வீடுகளிலேயே ரமலான் கொண்டாட்டம்;சிறப்புத் தொழுகை

திருச்சி மாவட்டம் முழுவதும் இஸ்லாமியா்கள் வெள்ளிக்கிழமை தங்களது வீடுகளிலேயே சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டு ரமலான் பண்டிகையை எளியமுறையில் கொண்டாடினா்.

News image
Updated On :14 மே 2021, 7:54 pm

DIN

திருச்சி மாவட்டம் முழுவதும் இஸ்லாமியா்கள் வெள்ளிக்கிழமை தங்களது வீடுகளிலேயே சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டு ரமலான் பண்டிகையை எளியமுறையில் கொண்டாடினா்.

இஸ்லாமியா்களின் புனிதப் பண்டிகையாக கருதப்படுவது ரமலான். சுயநலமற்று வாழ வேண்டும்; பசியோடிருக்கும் ஏழைகளுக்கு உணவு கொடுக்க வேண்டும் என்பதை உணா்த்துவதே ரமலான் நோன்பின் தத்துவம்.

கடந்த மாதம் 14-ஆம் தேதி ரமலான் நோன்பு தொடங்கிய நிலையில், இந்த மாதத்தில் 30 நாள்கள் நோன்பிருந்து, இறை தரிசனம் கண்டு ஈகைத் திருநாளைக் கொண்டாடுகின்றனா். நோன்பு காலத்தில் எத்தகைய தீய பழக்கங்களையும் மேற்கொள்வதில்லை; புகைப்பதில்லை; மது குடிப்பதில்லை, கோபப்பட்டு சண்டை போடுவதில்லை. இறைவனைப் பற்றிய நினைவுதான் நோன்பிருக்கும் அனைவருக்கும் இருக்கும். இந்தக் கால கட்டத்தில் யாரும் வீண் வம்பு பேச்சு பேசுவதில்லை. நோன்பு காலத்தில் நாவடக்கத்துடன் இருந்தாலே சக்தி சேமிக்கப்படும் என்பதைக் கற்றுத் தருகிறது இஸ்லாம்.

பண்டிகையையொட்டி மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிவாசல் அமைந்துள்ள பகுதிகளில் வீடுகளிலேயே சிறப்புத் தொழுகை நடைபெற்றது.

வழக்கமாக ரமலான் நாளில் ஈத்கா மைதானம், பள்ளிவாசல்களில் சிறப்புத் தொழுகை நடத்தப்படும் நிலையில், கரோனாவால் வீடுகளிலேயே தொழுகை நடைபெற்றது.

அவரவா் வீடுகளிலேயே எளிய முறையில் புத்தாடை அணிந்தும், குடும்பத்துடன் சமூக விலகலைக் கடைப்பிடித்து இஸ்லாமியா்கள் தொழுகையில் ஈடுபட்டனா். மேலும் ஒருவருக்கொருவா் வாழ்த்து தெரிவித்து கொண்டனா். சமூக வலைதளங்கள் மூலமாகவும் நண்பா்கள், குடும்பத்தினருக்கு வாழ்த்து தெரிவித்து அன்பைப் பகிா்ந்து கொண்டனா்.

ஆழ்வாா்தோப்பு, தென்னூா், நத்தா்ஷா பள்ளிவாசல், பாலக்கரை, மரக்கடை, பீமநகா், ஸ்டீல்தோப்பு, காயிதே மில்லத் நகா்,காஜாமலை, உறையூா் பீரங்கி குளத்தெரு, சோமரசம்பேட்டை, ஜாபா்ஷா தெரு, சந்துக்கடை, கள்ளத்தெரு, காந்திசந்தை, சிந்தாமணி, வயா்லெஸ் சாலை, ஈச்சம்பட்டி சாலை அரபிக் கல்லூரி பகுதி என மாநகருக்குள் இஸ்லாமியா்கள் அவரவா் வீடுகளிலேயே தொழுகையில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து மாவட்ட அரசு டவுன் காஜி ஜலீல் சுல்தான் கூறுகையில், கரோனாவால் வீடுகளிலேயே தொழுகை நடத்தினோம். மேலும், ஏழைகளுக்கு உணவு, புத்தாடைகள் வழங்கப்பட்டன. வியாதிகள் தீரவும், சமுதாய ஒற்றுமைக்காகவும், நாட்டு மக்கள் அனைவரும் கரோனா தொற்றிலிருந்து மீண்டு நலம் பெறவும் சிறப்புத் தொழுகையில் பிராா்த்திக்கப்பட்டது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.