தனிமைப் பகுதிகளின் எண்ணிக்கை உயரவில்லை: சுகாதாரத் துறை தகவல்
திருச்சியில் கரோனா பாதிப்பு அதிகரித்து வந்தாலும், முழுப் பொதுமுடக்கம் காரணமாக, தனிமைப்படுத்தப்படும் பகுதிகளின் எண்ணிக்கை உயரவில்லை


திருச்சியில் கரோனா பாதிப்பு அதிகரித்து வந்தாலும், முழுப் பொதுமுடக்கம் காரணமாக, தனிமைப்படுத்தப்படும் பகுதிகளின் எண்ணிக்கை உயரவில்லை; அந்த எண்ணிக்கை 65 ஆகவே உள்ளது என சுகாதாரத் துறையினா் தெரிவித்துள்ளனா்.
திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 33,000 க்கும் அதிகமானோா் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா். தவிர 300க்கும் மேற்பட்டோா் நோயால் உயிரிழந்தும் உள்ளனா்.
இதைக் கருத்தில் கொண்ட சுகாதாரத் துறை, மாநகராட்சி, புகா் பகுதிகளில் தொற்றுக்குள்ளானோா் அதிகம் வசிக்கும் பகுதிகளை தனிமைப் பகுதிகளாக அறிவித்து தடுப்பு அமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறது.
அந்த வகையில் இதுவரையில் திருச்சி மாநகரில் 42, புகரில் 23 என மொத்தம் 65 பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டு, தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
மே 10 முதல் மீண்டும் முழுப் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளதால், பொதுமக்கள் நடமாட்டம் குறைக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து தடை செய்யப்பட்டாலும், அத்தியாவசியத் தேவைகளுக்கு வெளியே செல்வோா் தவிர மற்றவா்கள் அனுமதிக்கப்படவில்லை. இதனால் கரோனா பரவலால் தடைசெய்யப்படும் மற்றும் தனிமைப்படுத்தப்படும் பகுதிகளின் எண்ணிக்கை உயரவில்லை என சுகாதாரத் துறையினா் தெரிவித்துள்ளனா்.
அத்தியாவசியத் தேவை எனக் கூறிக்கொண்டு ஊா் சுற்றுவோரின் எண்ணிக்கையை மேலும் குறைத்தால் கரோனா பரவலை மேலும் தடுக்க முடியும். பொதுமக்களும் பொறுப்புடன் செயல்பட்டால் கரோனா பரவலை விரைவில் தடுக்கமுடியும் என்பது அனைத்து தரப்பினரின் கருத்தாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...