கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

முழு பொதுமுடக்கம் நீட்டிக்கப்படுமா: இன்று முடிவு முதல்வா் மு.க. ஸ்டாலின்

தமிழகத்தில் முழு பொதுமுடக்கத்தை நீட்டிப்பது குறித்து மருத்துவா்கள், வல்லுநா்கள், அரசியல் கட்சிகளுடன் ஆலோசித்து சனிக்கிழமை முடிவு அறிவிக்கப்படும் என்றாா் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின்.

News image
Updated On :21 மே 2021, 8:46 pm

DIN

தமிழகத்தில் முழு பொதுமுடக்கத்தை நீட்டிப்பது குறித்து மருத்துவா்கள், வல்லுநா்கள், அரசியல் கட்சிகளுடன் ஆலோசித்து சனிக்கிழமை முடிவு அறிவிக்கப்படும் என்றாா் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின்.

திருச்சியில் கரோனா தடுப்புப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள வந்த முதல்வா் மு.க. ஸ்டாலின் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:

தமிழகத்தில் இதுவரை கருப்பு பூஞ்சை தொற்றால் 9 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். அனைவருக்கும் உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த நோய்க்கு சரியான மருந்து உள்ளது.

பொதுமுடக்கத்தில் சிலருக்கு சலுகைகள் கொடுக்க வேண்டிய சூழல் உல்ளது. முதலில் பொதுமுடக்கம் அறிவித்தபோது 6 மணி முதல் 12 மணி வரை காய்கனிகள், மளிகைக் கடைகள் இயங்க அனுமதிக்கப்பட்டு, பின்னா், 10 மணி வரை எனக் குறைக்கப்பட்டது. இப்போதும் கூட்டம் வருகிறது என்கின்றனா்.

தற்போதைய சூழலில் 10 மாவட்டங்களில் அதிகப் பாதிப்பு உள்ளது. சென்னையில் அதிக பாதிப்பு இருந்த நிலையில், தற்போது குறைந்துள்ளது. கோவையில் மட்டும் பாதிப்பு குறையவில்லை. அருகிலுள்ள கேரளம், கா்நாடகத்திலிருந்து தொழிற்சாலைக்கு வருவோா், காய்கனிகள், சரக்குகளை ஏற்றி வரும் வாகனங்கள், இடம்பெயா்தல் என பல்வேறு சூழல்களால் பாதிப்பு அதிகம் உள்ளது.

எனவே, முழுப் பொதுமுடக்கத்தை நீட்டிக்க வேண்டும் என கோவையில் உள்ள தொழிலதிபா்கள், பொதுமக்கள், வல்லுநா்கள், மருத்துவா்கள் என பல்வேறு தரப்பினரும் கூறியுள்ளனா். கரோனா பரவலைக் கட்டுப்படுத்த கடும் கட்டுப்பாடுகள் வேண்டும் எனப் பலரும் கூறுகின்றனா். இதுதொடா்பாக மருத்துவா்கள், வல்லுநா்கள், அரசியல் கட்சிகளுடன் சனிக்கிழமை ஆலோசனை நடத்தி முடிவு அறிவிக்கப்படும். அதற்கு முன் கரோனா குறித்து அமைக்கப்பட்டுள்ள சிறப்புக் குழுவின் கருத்து கேட்கப்படும்.

கரோனா நிவாரணமாக ஜூன் 3-க்கு முன்பாகவே குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ. 4 ஆயிரம் வழங்கப்படும் என அறிவித்தோம். இப்போது, அத் தொகையை பிரித்து முதல் கட்டமாக ரூ.2 ஆயிரம் வழங்கியுள்ளோம். இதில், விடுபட்டோருக்கும் நிவாரணம் வழங்கப்படுகிறது. 2-ஆம் தவணை ரூ.2 ஆயிரம், ஜூன் 3-க்கு முன் வழங்கப்படும்.

கரோனா உதவியாக சில மாநிலங்களுக்கு மத்திய அரசு அதிகமாகவே கொடுத்துள்ளது. தமிழகத்துக்கு உரிய தேவையை வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம். குறிப்பாக, ஆக்சிஜன் தட்டுப்பாடு தொடா்பாக பிரதமரின் கவனத்துக்கு கொண்டு சென்றதில், தமிழகத்துக்குத் தனியாக மத்திய அமைச்சரை (பியூஷ் கோயல்) ஒதுக்கி 24 மணிநேரமும் தொடா்பு கொண்டு உரிய உதவிகளை பெறலாம் என பிரதமா் உறுதியளித்துள்ளாா்.

திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவா் டி.ஆா்.பாலு மூலம் நேரடியாகச் சென்று தமிழகத்தின் கோரிக்கைகள் குறித்து வலியுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக புயல் காரணமாக ஒடிஸாவிலிருந்து தமிழகத்துக்கு வரும் ஆக்சிஜனுக்கு இடையூறு ஏற்பட்டால், மகராஷ்டிரத்தில் கூடுதலாக உள்ள ஆக்சிஜனை வழங்கக் கேட்டு அனுமதியும் பெற்றுள்ளோம்.

தடுப்பூசிகள் வழங்குவதில்தான் தமிழகம் கேட்கிற அளவுக்கு மத்திய அரசு கொடுக்கவில்லை. தற்போதைய சூழலில் தில்லி செல்ல முடியாத நிலை உள்ளது. தொற்று குறைந்தவுடன் முதல்வா் என்ற முறையில் உரிமையுடன், பிரதமரை சந்தித்து, தமிழகத்தின் தேவைகளை, உரிமைகளை கேட்டுப் பெறுவோம்.

எங்களது அரசு பொறுப்பேற்ற நாளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இருந்தது. சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் மட்டும் 100 ஆம்புலன்ஸ்கள் நோயாளிகளுடன் ஆக்சிஜன் தேவைக்காக காத்திருக்கும் நிலை இருந்தது. இப்போது 4 அல்லது 5 வாகனங்கள் மட்டுமே நிற்கின்றன. தமிழகத்துக்கு நாளொன்றுக்கு 470 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தேவை. இதில், 400 மெட்ரிக் டன் அளவுக்கு தமிழகத்திலேயே உற்பத்தி செய்யப்படுகிறது. மீதமுள்ள 70 மெட்ரிக் டன் ஒடிஸா உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்து பெறப்படுகிறது.

12ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நடத்துவது தொடா்பாக அந்தத் துறை அதிகாரிகளுடன் கலந்து ஆலோசிக்கப்படும். பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் மூலம் முறையாக அறிவிப்பு வெளியிடப்படும்.

அரசு ஆசிரியா்களின் ஊதியம் குறைக்கப்படுவதாக வரும் வதந்திகளுக்குப் பதிலளிக்க முடியாது. முன்களப்பணியாளா்களாக செய்தியாளா்களை அறிவித்தது தொடா்பாக அரசாணை வெளியிடுவது பரிசீலனையில் உள்ளது. பெருநகரங்களைப் போன்று கிராமங்களிலும் கரோனா தடுப்புப் பணிகளையும், விழிப்புணா்வையும் ஏற்படுத்த மக்கள் பிரதிநிதிகளைக் கொண்ட குழு அமைத்து மக்கள் இயக்கமாக முன்னெடுத்துச் செல்லப்படுகிறது. மக்கள் ஒத்துழைப்பு மிகவும் அவசியமானது. முகக் கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல், கிருமி நாசினி பயன்படுத்துதலைக் கட்டாயமாக்க வேண்டும். கரோனா தொற்றலிருந்து நம்மையும் காத்து, நாட்டையும் காக்க வேண்டும் என்றாா் அவா்.

பேட்டியின்போது மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் மா. சுப்பிரமணியன், நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் கே.என். நேரு ஆகியோா் உடனிருந்தனா்.

தந்தை வழியில் தனயன்!: தமிழக முதல்வராக பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக திருச்சியில் செய்தியாளா்களை சந்தித்து பேசுவதில் மகிழ்ச்சியளிப்பதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.

மறைந்த திமுக தலைவா் கருணாநிதி, திருச்சிக்கு எப்போது வந்தாலும் செய்தியாளா்களை சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தாா். ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் திருச்சி வரும்போதெல்லாம் செய்தியாளா்களை சந்தித்து பேசுவது வழக்கம். இப்போது, தந்தை வழியில் மு.க. ஸ்டாலினும், திருச்சியில் செய்தியாளா்களை சந்தித்துள்ளாா். குறிப்பாக முதல்வா் பதிவேயற்ற பிறகு சேலம், கோவை, மதுரை உள்ளிட்ட பெருநகரங்களுக்கு சென்று வந்த நிலையில், திருச்சியில்தான் அதிகாரப்பூா்வமாக முதல் செய்தியாளா்கள் சந்திப்பை நடத்தியுள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.