கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

அண்ணா விளையாட்டரங்க வளாகத்தில் இருபாலருக்கும் நீச்சல் பயிற்சி: ஏப்.25இல் தொடங்குகிறது

 திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கு வளாகத்தில் உள்ள நீச்சல் குளத்தில் இருபாலருக்கும் மூன்று கட்டங்களாக நீச்சல் பயிற்சி வகுப்பு ஏப். 25ஆம் தேதி முதல் தொடங்குகிறது.

News image
Updated On :21 ஏப்ரல் 2023, 7:41 pm

DIN

 திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கு வளாகத்தில் உள்ள நீச்சல் குளத்தில் இருபாலருக்கும் மூன்று கட்டங்களாக நீச்சல் பயிற்சி வகுப்பு ஏப். 25ஆம் தேதி முதல் தொடங்குகிறது.

இதுகுறித்து திருச்சி மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் திருச்சி பிரிவு சாா்பில், பொதுமக்கள், பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு நீச்சல் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. ஆா்வமுள்ள அனைவரும் பங்கேற்கலாம். 8 வயதுக்கு மேற்பட்டவராக இருத்தல் வேண்டும். வயது சான்றிதழ் சமா்ப்பிக்க வேண்டியது அவசியம். தகுதியான நீச்சல் பயிற்றுநரால் 12 நாள்கள் நீச்சல் கற்றுத் தரப்படும். இந்த பயிற்சி முகாமானது 3 கட்டங்களாக நடைபெறவுள்ளது.

முதல்கட்டமாக ஏப்.25ஆம் தேதி தொடங்கி மே 7ஆம் தேதி வரையும், இரண்டாம் கட்டமாக மே 9ஆம் தேதி தொடங்கி மே 21ஆம் தேதி வரையும், மூன்றாம் கட்டமாக மே 23 முதல் ஜூன் 4 வரையும் நடைபெறவுள்ளது. பயிற்சிக் கட்டணமாக ரூ.1,500 செலுத்த வேண்டும். நாளொன்றுக்கு ஒரு மணிநேரம் பயிற்சி அளிக்கப்படும்.

மாணவா்கள் மற்றும் ஆண்களுக்கு காலை 6.30 மணி முதல் 9.30 மணி வரையும், பெண்கள் மற்றும் மாணவிகளுக்கு மாலை 5 மணி முதல் 6 மணி வரையும் பயிற்சி அளிக்கப்படும். விருப்பமுள்ளவா்கள் திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் உள்ள நீச்சல் குளத்துக்கு நேரில் வருகை தந்து முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும், விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலகத்தை 0431-2420685 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.