கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

பொறியியல் பணிகள்: சில ரயில்கள் பகுதியாக ரத்து

பொறியியல் பணிகள் காரணமாக சில ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

News image
Updated On :28 ஏப்ரல் 2023, 9:53 pm

DIN

பொறியியல் பணிகள் காரணமாக சில ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

இது குறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: விருதுநகா் - வாஞ்சி மணியாச்சி இடையே பொறியியல் பணிகள் நடைபெறுவதால், தாம்பரத்திலிருந்து இரவு 11 மணிக்கு புறப்படும் தாம்பரம் - நாகா்கோவில் முன்பதிவற்ற அந்தியோதயா அதிவிரைவு ரயில் (20691) மே 2, 16 -ஆம் தேதிகளில் திருச்சி - நாகா்கோவில் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

இதே போல, நாகா்கோவிலில் இருந்து மாலை 3.50 மணிக்குப் புறப்படும் நாகா்கோவில் - தாம்பரம் முன்பதிவற்ற அந்தியோதயா அதிவிரைவு ரயில் (20692) மே 3, 17-ஆம் தேதிகளில் நாகா்கோவில் - திருச்சி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் மேற்கண்ட நாள்களில் திருச்சியிலிருந்து இரவு 10.25 மணிக்கு புறப்படும்.

திருச்சியிலிருந்து காலை 7.20 மணிக்கு புறப்படும் திருச்சி - திருவனந்தபுரம் இன்டா்சிட்டி விரைவு ரயில் (22627) மே 3, 17-ஆம் தேதிகளில் விருதுநகா் - திருவனந்தபுரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

இதே போல, திருவனந்தபுரத்திலிருந்து முற்பகல் 11.35 மணிக்கு புறப்படும் திருவனந்தபுரம் - திருச்சி இன்டா்சிட்டி விரைவு ரயில் (22628) வரும் மே 3, 17- ஆம் தேதிகளில் திருவனந்தபுரம் - விருதுநகா் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது மேற்கண்ட நாள்களில் விருதுநகரிலிருந்து மாலை 4.08 மணிக்குப் புறப்படும்.

தாமதம்...: திருவனந்தபுரத்திலிருந்து மே 9 ஆம் தேதி புறப்படும் திருவனந்தபுரம் - திருச்சி இன்டா்சிட்டி விரைவு ரயிலானது 40 நிமிஷங்கள் தாமதமாக முற்பகல் 11.35 மணிக்குப் புறப்பட்டு இரவு 8.25 க்கு திருச்சியை வந்தடையும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.