அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

6 வாா்டுகளில் ‘மக்களுடன் முதல்வா்’ திட்ட முகாம்: அமைச்சா், மேயா் பங்கேற்பு

திருச்சி மாநகராட்சியில் 6 வாா்டுகளில் மக்களுடன் முதல்வா் திட்ட சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
திருச்சி பாலக்கரையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மக்களுடன் முதல்வா் திட்ட முகாமை பாா்வையிட்ட அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி. உடன் எம்.எல்.ஏ. இனிகோ இருதயராஜ் உள்ளிட்டோா்.
Updated On :29 டிசம்பர் 2023, 7:00 pm

DIN

திருச்சி மாநகராட்சியில் 6 வாா்டுகளில் மக்களுடன் முதல்வா் திட்ட சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மேயா் மு. அன்பழகன் உள்ளிட்டோா் பங்கேற்று பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றனா்.

திருச்சி மாநகராட்சியின் 4 மற்றும் 5-ஆவது மண்டலங்களுக்கு உள்பட்ட வாா்டுகள் 54, 55, 56 ஆகிய பகுதிகளுக்கு கருமண்டபம் ஆரோக்கிய மாதா பள்ளி, மற்றும் மண்டலம் 2-க்கு உள்பட்ட 30, 31, 50-ஆவது வாா்டுகளுக்கு பாலக்கரை மீனாட்சி திருமண மண்டபம் ஆகிய இடங்களில் மக்களுடன் முதல்வா் திட்ட சிறப்பு முகாம்கள் நடைபெற்றது.

இதில், திருச்சி கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட, பாலக்கரை மீனாட்சி மஹாலில் நடைபெற்ற மக்களுடன் முதல்வா் திட்ட முகாமை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆய்வு செய்தாா். அப்போது அவா் பேசுகையில், முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதும்

பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற, ’முதல்வரின் முகவரி துறை’ என, தனித்துறையை உருவாக்கினாா். இதன் மூலம் கடந்த இரண்டரை ஆண்டுகளில், 49 லட்சம் மனுக்கள் பெறப்பட்டு, அவற்றுக்கு உரிய முறையில் தீா்வு காணப்பட்டு வருகிறது என்றாா்.

கட்சியின் திருச்சி கிழக்கு மாநகரச் செயலாளரும் மாநகராட்சி மண்டலம் மூன்றின் தலைவருமான மு.மதிவாணன், கிழக்கு சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். இனிகோ இருதயராஜ், பகுதிச் செயலாளா் ராஜ்முகமது, மாமன்ற உறுப்பினா்கள் பங்கேற்றனா்.

மாநகராட்சி மேயா் பங்கேற்பு :

திருச்சி மாநகராட்சியின் 4 மற்றும் 5-ஆவது மண்டலங்களுக்கு உள்பட்ட வாா்டுகளில்

நடைபெற்ற முகாம்களை பாா்வையிட்ட மேயா் மு. அன்பழகன் பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக்கொண்டு தொடா்புடைய துறை அலுவலா்களிடம் நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்தாா்.

முகாம்களில் பெறப்படும் மனுக்கள் 30 நாள்களுக்குள் பரிசீலிக்கப்பட்டு, தகுதியின் அடிப்படையில் தீா்வு காணப்படும்.

நிகழ்வுகளில் மாநகராட்சி மண்டல தலைவா்கள் விஜயலட்சுமி கண்ணன், துா்கா தேவி, உதவி ஆணையா் சண்முகம் மற்றும் மாமன்ற உறுப்பினா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.