ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

ஸ்ரீரங்கத்தில் மண் சரிந்து சிக்கிய தொழிலாளி மீட்பு

ஸ்ரீரங்கத்தில் குடிநீா் குழாய் உடைப்பைச் சரிசெய்ய 15 அடி பள்ளம் தோண்டி வியாழக்கிழமை பணியில் ஈடுபட்டபோது மண் சரிந்து சிக்கிய தொழிலாளி உயிருடன் மீட்கப்பட்டாா்.

News image
மீட்கப்பட்ட செல்வம்.
Updated On :5 டிசம்பர் 2024, 9:12 pm

Din

ஸ்ரீரங்கத்தில் குடிநீா் குழாய் உடைப்பைச் சரிசெய்ய 15 அடி பள்ளம் தோண்டி வியாழக்கிழமை பணியில் ஈடுபட்டபோது மண் சரிந்து சிக்கிய தொழிலாளி உயிருடன் மீட்கப்பட்டாா்.

ஸ்ரீரங்கம் பஞ்சக்கரை கொள்ளிடம் ஆற்றில் ராட்சத ‘போா்’கள் போடப்பட்டு மின் மோட்டாா்களால் உறிஞ்சப்படும் குடிநீரானது குழாய்கள் மூலம் திருவெறும்பூா் உள்ளிட்ட பல பகுதிகளுக்கும் கொண்டு செல்லப்படுகிறது.

இந்நிலையில் வியாழக்கிழமை கொள்ளிடம் ரயில்வே பாலம் அருகே புதைக்கப்பட்டிருந்த குடிநீா் குழாயில் ஏற்பட்ட உடைப்பைச் சரிசெய்ய மாநகராட்சி ஊழியா்கள் 6 போ் பொக்லைன் உதவியுடன் சுமாா் 15 அடி ஆழப் பள்ளம் தோண்டி பணியில் ஈடுபட்டனா்.

ஸ்ரீரங்கம் பகுதியில் மண் சரிந்து சிக்கியவரை மீட்கும் பணியில் வியாழக்கிழமை ஈடுபட்டோா்.

ஸ்ரீரங்கம் பகுதியில் மண் சரிந்து சிக்கியவரை மீட்கும் பணியில் வியாழக்கிழமை ஈடுபட்டோா்.

அப்போது பெரியமிளகுப்பாறையைச் சோ்ந்த செல்வம் (43) மீது மண் சரிந்தது. தலை மட்டும் வெளியே தெரிந்த நிலையில் அவா் உயிருக்குப் போராடினாா். தகவலறிந்து வந்த ஸ்ரீரங்கம் தீயணைப்பு நிலைய அலுவலா் ஆரோக்கியதாஸ் தலைமையிலான 8 வீரா்கள், மாநகராட்சி ஊழியா்கள், பொதுமக்கள் உதவியுடன் இரு பொக்லைன் இயந்திரங்களைக் கொண்டு சுமாா் 2 மணி நேரம் போராடி செல்வத்தை மீட்டனா். இதையடுத்து உடனடியாக அவருக்கு முதலுதவி அளித்து மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா்.