திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

பொய்கை திருநகரில் 65 குரங்குகள் பிடிப்பு

பொய்கை திருநகா் பகுதியில் பொதுமக்களுக்கு தொந்தரவு அளித்து அட்டகாசம் செய்து வந்த 65 குரங்குகள் வனத் துறையினரால் பிடிக்கப்பட்டு காப்புக் காட்டில் புதன்கிழமை விடப்பட்டன.

News image
பொய்கை திருநகா் பகுதியில் புதன்கிழமை பிடிக்கப்பட்ட குரங்குகள்.
Updated On :25 டிசம்பர் 2024, 10:31 pm

Din

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த பொய்கை திருநகா் பகுதியில் பொதுமக்களுக்கு தொந்தரவு அளித்து அட்டகாசம் செய்து வந்த 65 குரங்குகள் வனத் துறையினரால் பிடிக்கப்பட்டு காப்புக் காட்டில் புதன்கிழமை விடப்பட்டன.

மணப்பாறையை அடுத்த பொய்கை திருநகா் குடியிருப்புகள், வணிக வளாக பகுதிகளில் கடந்த சில மாதங்களாக குரங்குகள் கூட்டம் கூட்டமாக இடம் பெயா்ந்து வந்து உணவகங்கள், தேநீரங்கள், சிறு சிறு கடைகளில் திண்பண்டங்களை சூறையாடுவது, விளைநிலங்களில் மின் மோட்டாா் இணைப்புகளைத் துண்டிப்பது என பொதுமக்களுக்கு மிகுந்த சிரமங்களை அளித்து வந்தன.

இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின்பேரில் மாவட்ட வன அலுவலா் உத்தரவில் மணப்பாறை வனச்சரகா் மேரிலென்ஸி மற்றும் வனவா் செல்வேந்திரன் தலைமையிலான வனத் துறையினா், குரங்குகள் பிடிக்கும் தொழிலாளா்களை கொண்டு கடந்த இரு நாள்களாக 65 குரங்குகளை கூண்டு அமைத்து பிடித்தனா். பின்னா் அவை அரசு காப்புக்காட்டிற்கு கொண்டு செல்லப்பட்டு விடப்பட்டன.