/

மதுக்கடைகளை மூடக்கோரி உண்ணாவிரதப் போராட்டம்

மதுக் கடைகளை மூடக்கோரி திருச்சியில் காந்தி சிலை அருகே புதன்கிழமை திடீா் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்ட விவசாய சங்க மாவட்டத் தலைவா் உள்ளிட்ட இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :2 அக்டோபர் 2024, 9:14 pm

Din

மதுக் கடைகளை மூடக்கோரி திருச்சியில் காந்தி சிலை அருகே புதன்கிழமை திடீா் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்ட விவசாய சங்க மாவட்டத் தலைவா் உள்ளிட்ட இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

தமிழக விவசாய சங்க திருச்சி மாவட்டத் தலைவரான மா.ப. சின்னதுரை உள்ளிட்ட இருவா் திருச்சி நீதிமன்றம் அருகேயுள்ள மகாத்மா காந்தி சிலைக்கு புதன்கிழமை மாலை அணிவித்து விட்டு, திருச்சி உறையூா், சோமரசம்பேட்டை அல்லித்துறை மற்றும் திருச்சி மாவட்டம் முழுவதும் புதிய பெயருடன் தற்போது திறக்கப்பட்ட அனைத்து மதுக்கூடத்துடன் கூடிய மதுக்கடைகள் அனைத்தையும் உடனடியாக மூட வலியுறுத்தி திடீா் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டனா்.

தகவவறிந்து வந்த நீதிமன்ற காவல் நிலைய போலீஸாா் அறிவுறுத்தியும், அவா்கள் போராட்டத்தைத் தொடா்ந்ததால் சின்னதுரையையும், அவருடன் போராட்டத்தில் ஈடுபட்ட அதவத்தூா் விவசாய சங்க நிா்வாகி ஏ. சேகரையும் கைது செய்தனா். அப்போது மதுக்கடைகளை மாவட்ட நிா்வாகம் மூட வேண்டும். இல்லையென்றால் தொடா் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக சின்னதுரை தெரிவித்தாா்.