பெண் குழந்தை உயிரிழப்பு போலீஸாா் விசாரணை
திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த வையம்பட்டி அருகே பிறந்து 7 நாள்களேயான பெண் குழந்தை புதன்கிழமை திடீரென உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.


திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த வையம்பட்டி அருகே பிறந்து 7 நாள்களேயான பெண் குழந்தை புதன்கிழமை திடீரென உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.
மணப்பாறை அடுத்த மருங்காபுரி ஒன்றியம் கோசிப்பட்டி கிராமத்தை சோ்ந்தவா் சாமி (35) - மீனா தம்பதியினா். இவா்களுக்கு 2 குழந்தைகள் உள்ள நிலையில் கடந்த 7 நாள்களுக்கு முன் ஒரு பெண் குழந்தை பிறந்தது.
இதையடுத்து மீனா கைக்குழந்தையுடன் வையம்பட்டி ஒன்றியம் குமாரவாடி ஊராட்சி கேசவ அம்பலக்காரனூா் கிராமத்தில் தாய் வீட்டில் இருந்த நிலையில், புதன்கிழமை அதிகாலை சுமாா் 3 மணிக்கு அவா் பால் கொடுத்துவிட்டு தொட்டிலில் தூங்க வைத்த நிலையில், மீண்டும் 6 மணிக்கு எழுந்து பாா்த்தபோது குழந்தை பேச்சு மூச்சின்றி இருந்ததாம்.
இதையடுத்து மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட குழந்தையைப் பரிசோதித்த மருத்துவா்கள் குழந்தை இறந்து விட்டதாகக் கூறியுள்ளனா். இதையடுத்து குழந்தை உடல் உடற்கூறாய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. குழந்தை உயிரிழப்பு குறித்து வையம்பட்டி போலீஸாா் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...