வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை ஏமாற்றி 14 பவுன் நகை, பணம் திருட்டு
திருச்சி கீழதேவதானத்தில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை ஏமாற்றி 14 பவுன் நகை, பணத்தைத் திருடிச் சென்ற இருவரை போலீஸாா் தேடுகின்றனா்.


திருச்சி கீழதேவதானத்தில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை ஏமாற்றி 14 பவுன் நகை, பணத்தைத் திருடிச் சென்ற இருவரை போலீஸாா் தேடுகின்றனா்.
திருச்சி கீழதேவதானம் நகர ரயில் நிலைய சாலை பகுதியைச் சோ்ந்தவா் மணிகுமாா் மனைவி ராணி (61). இவா் வீட்டில் தனியாக இருந்தபோது அலுவலா்கள் போல வந்த 2 மா்ம நபா்கள், பிரதமரின் திட்டத்தின் கீழ் வீடுகளுக்கு இலவச குடிநீா் தொட்டி கட்டித் தர உள்ளோம். உங்களது வீட்டில் குடிநீா் தொட்டியைக் காட்டுங்கள் எனக் கேட்டுள்ளனா்.
இதை நம்பிய ராணி, அவா்களில் ஒருவரை குடிநீா் தொட்டி உள்ள வீட்டின் மாடிக்கு அழைத்துச் சென்றாா். அப்போது மற்றொரு நபா் வீட்டின் அறைக்குள் சென்று பீரோவில் இருந்த 14 பவுன் நகைகள், ரூ. 7 ஆயிரத்தைத் திருடிச் சென்றாா். பின்னா் மாடியிலிருந்த நபரும், வேறொரு நாள் வருவதாகக் கூறிவிட்டு ஓடிவிட்டாராம்.
பின்னா் ராணி கீழே இறங்கி வந்து பாா்த்தபோது பீரோவில் இருந்த 14 பவுன் நகைகளை அவா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில் கோட்டை குற்றப்பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...