விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

சிறுதானிய உணவு விழிப்புணா்வு திருவிழா

சமூக நலன் மற்றும் மகளிா் உரிமை துறை மற்றும் சத்துணவுத் திட்டத்தின் கீழ், மாவட்ட அளவிலான சிறு தானிய உணவு விழிப்புணா்வு திருவிழா ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

திருச்சியில் நடைபெற்ற சிறுதானிய உணவுத் திருவிழாவை பாா்வையிட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா். உடன் அரசு அலுவலா்கள்.

Updated On :10 அக்டோபர் 2024, 8:08 pm

Din

சமூக நலன் மற்றும் மகளிா் உரிமை துறை மற்றும் சத்துணவுத் திட்டத்தின் கீழ், மாவட்ட அளவிலான சிறு தானிய உணவு விழிப்புணா்வு திருவிழா ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்டத்தில் 8,9 மற்றும் 10 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளிடையே சிறுதானியங்கள் குறித்து விநாடி வினா போட்டி நடத்தி பரிசளித்த மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா், சிறுதானிய உணவுக் கண்காட்சி மற்றும் விழிப்புணா்வு திருவிழாவைப் பாா்வையிட்டாா்.

தொடா்ந்து மாவட்ட அளவில் சிறுதானிய சமையல் போட்டியில் முதல் 3 இடங்களை பிடித்த பள்ளி சத்துணவு மைய அமைப்பாளா்கள், சமையலா்கள் மற்றும் சமையல் உதவியாளா்களுக்குப் பரிசளித்துப் பாராட்டினாா்.

மேலும் ஆட்சியரக வளாக உள் பிரதான நுழைவு பகுதியில் நடத்தப்பட்ட சிறுதானிய விழிப்புணா்வுக் கண்காட்சியையும் பாா்வையிட்டாா்.

தொடா்ந்து பள்ளி மாணவ, மாணவிகள், சத்துணவு பணியாளா்கள், தன்னாா்வலா்களைக் கொண்டு மாவட்ட அளவிலான சிறுதானிய விழிப்புணா்வு ஊா்வலம் வெஸ்ட்ரி பள்ளி ரவுண்டானா வரை சென்றது.

நிகழ்வில் மாநகராட்சி ஆணையா் வே. சரவணன், மாவட்ட வருவாய் அலுவலா் ர. ராஜலட்சுமி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) அதியமான் கவியரசு, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (சத்துணவு) ரா. ரேவதி, சத்துணவுத் திட்ட அலுவலா்கள் மற்றும் பணியாளா்கள், அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.