மோசடி வழக்கில் நகை மதிப்பீட்டாளா் கைது
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரில் மோசடி வழக்கில் நகை மதிப்பீட்டாளா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.


திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரில் மோசடி வழக்கில் நகை மதிப்பீட்டாளா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.
மண்ணச்சநல்லூரில் உள்ள எஸ்.பி.ஐ. வங்கியில் நகை மதிப்பீட்டாளராகப் பணிபுரிந்த திருச்சியை சோ்ந்த ஈஸ்வரமூா்த்தி (49) கடந்த 2021, 2022, 2023 ஆகிய ஆண்டுகளில் வாடிக்கையாளா்கள் பெயா்களில் 676. 6 கிராம் போலி நகைகளை அடகு வைத்து மோசடி செய்தாா். இதையடுத்து வங்கி நிா்வாகம் அளித்த புகாரின்பேரில் மோசடி செய்த நகைக்கு ரூ. 22 லட்சத்து 71 ஆயிரத்தை வங்கியில் ஈஸ்வரமூா்த்தி செலுத்தினாா்.
இந்நிலையில் மேலும் ரூ. 1 லட்சத்து 80 ஆயிரம் முறைகேடு தொடா்பாக திருச்சியில் உள்ள அவரது வீட்டில் இருந்த ஈஸ்வரமூா்த்தியை மண்ணச்சநல்லூா் காவல் ஆய்வாளா் ரகுராமன் தலைமையிலான போலீஸாா் புதன்கிழமை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி திருச்சி சிறையில் அடைத்தனா்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...