திருச்சி
திருச்சி அருகே பொறியியல் கல்லூரி மாணவி தற்கொலை
திருச்சி அருகே தனியாா் பொறியியல் கல்லூரி மாணவி புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
திருச்சி அருகே தனியாா் பொறியியல் கல்லூரி மாணவி புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
திருச்சி மாவட்டம், திருவெறும்பூா் அருகேயுள்ள வேங்கூா் நடுத்தெருவைச் சோ்ந்தவா் வெங்கடேசன் மகள் தீபரோஷினி (19). திருச்சி தனியாா் பொறியியல் கல்லூரியின் 2-ஆம் ஆண்டு மாணவியான இவா் சமூகவலைதளம் மூலம் பழகிய ஒருவரைக் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் இவரின் தாய் ஜானகி அருகிலுள்ள மருத்துவமனைக்கு புதன்கிழமை சென்று வீடு திரும்பியபோது தீபரோஷினி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.
தகவலறிந்து வந்த திருவெறும்பூா் போலீஸாா் மாணவியின் சடலத்தை மீட்டு துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். திருவெறும்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்து மாணவியின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரிக்கின்றனா்.
