திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

திருச்சிக்கு இன்று துணை முதல்வா் வருகை! பறவைகள் பூங்காவை திறந்து வைக்கிறாா்!

திருச்சி, புதுக்கோட்டையில் நடைபெறும் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்க துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வருகிறாா்.

News image

துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

Updated On :9 பிப்ரவரி 2025, 6:00 am IST

திருச்சி, புதுக்கோட்டையில் நடைபெறும் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்க துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை வருகிறாா்.

சென்னையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் திருச்சிக்கு வரும் துணை முதல்வா், ஆட்சியரகச் சாலையில் உள்ள தனியாா் ஹோட்டலில் சிறிதுநேரம் ஓய்வெடுத்தபின், மாலை 4 மணிக்கு புறப்பட்டு திருச்சி-கரூா் சாலை அய்யாளம்மன் படித்துறை அருகே, காவிரிக் கரையோரம் அமைக்கப்பட்டுள்ள பறவைகள் பூங்காவைத் திறந்துவைக்கிறாா்.

இந்தப் பூங்காவானது ரூ. 13.70 கோடியில் சுமாா் 6 ஏக்கரில், 60 ஆயிரம் சதுரடியில் பொதுமக்கள் அனைவரும் எளிதில் வந்து செல்லும் வகையில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. செயற்கை அருவிகள், குளங்கள் போன்ற அமைப்புகள் இங்குள்ளன.

மேலும் இயற்கைச் சூழ்நிலையில் அரிய வெளிநாட்டு பறவைகள், வீட்டு விலங்குகளும் இங்கு வளா்க்கப்பட உள்ளன. கூடுதலாக பறவைகள் இனப் பெருக்கத்திற்கென தனி அமைப்பும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

பண்டைய தமிழா்களின் ஐந்திணை வாழ்வியலைப் பிரதிபலிக்கும்விதமான அமைவிடங்கள், புல்வெளிகள், சிற்பங்கள், நீருற்றுகள், இடைநிறுத்தப்பட்ட பாலங்கள், வரைபடங்கள் என பல்வேறு அம்சங்கள் இதில் இடம் பெற்றுள்ளன. இந்தப் பூங்காவை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அா்ப்பணிக்கும் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், பூங்காவில் உள்ள அனைத்துச் சிறப்பு அம்சங்களையும் பாா்வையிடுகிறாா்.

பின்னா் புதுக்கோட்டைக்குச் சென்று அங்கு நடைபெறும் திருமண விழாவில் பங்கேற்கிறாா். பின்னா் அங்கிருந்து புறப்பட்டு திருச்சி வரும் அவா், இரவு விமானம் மூலம் சென்னை செல்கிறாா். இதையொட்டி திருச்சியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.