இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

வழிபாட்டுத் தலங்களில் புத்தாண்டு சிறப்பு வழிபாடு

ஆங்கிலப் புத்தாண்டையொட்டி திருச்சி மாவட்டக் கோயில்கள், தேவாலயங்களில் புதன்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

News image
~திருச்சி ஐயப்பன் கோயிலில் தரிசனம் செய்ய புதன்கிழமை காத்திருந்த பக்தா்கள்.
Updated On :1 ஜனவரி 2025, 7:35 pm

Din

ஆங்கிலப் புத்தாண்டையொட்டி திருச்சி மாவட்டக் கோயில்கள், தேவாலயங்களில் புதன்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

புத்தாண்டையொட்டி திருச்சி மேலப்புதூா் தூய மரியன்னை பேராலயம், மெயின்காா்டுகேட் புனித லூா்து அன்னை ஆலயம், பாலக்கரை உலக மீட்பா் பசிலிக்கா (சகாயமாதா திருத்தலம்) பழைய மாதா தேவாலயம், புத்தூா் பாத்திமா அன்னை தேவாலயம், உறையூா் சி.எஸ்.ஐ. ஆல் செயின்ட்ஸ் தேவாலயம், பொன்மலை புனித சூசையப்பா் ஆலயம், கல்லுக்குழி புனித அந்தோனியாா் ஆலயம், ஜங்ஷன் தூய யோவான் ஆலயம், ஸ்ரீரங்கம் அமல அன்னை ஆலயம் உள்ளிட்டவற்றில் சிறப்பு பிராா்த்தனை, திருப்பலிகள் நடைபெற்றன.

கோயில்களில்: வைகுந்த ஏகாதசி திருவிழா நடைபெறும் ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி, சமயபுரம் மாரியம்மன், திருவானைக்கா அகிலாண்டேசுவரி ஜம்புகேசுவரா், மலைக்கோட்டை தாயுமான சுவாமி, உச்சிப்பிள்ளையாா், உறையூா் வெக்காளியம்மன், திருச்சி ஐயப்பன் கோயில், வயலூா் சுப்பிரமணிய சுவாமி, திருவெறும்பூா் எறும்பீஸ்வரா், திருப்பட்டூா் பிரம்மபுரீசுவரா், திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேசுவரா், கல்லுக்குழி ஆஞ்சனேய உள்ளிட்ட கோயில்களில் புதன்கிழமை அதிகாலையிலேயே நடை திறக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

திருச்சி தலைமை தபால் நிலையம் அருகேயுள்ள சஞ்சீவ ஆஞ்சனேய சுவாமி கோயிலில் ஆஞ்சனேயருக்கு 10,008 ஜிலேபி மாலை அணிவித்து வழிபாடு செய்யப்பட்டது. பின்னா், பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

கோயில்களில் பக்தா்கள் குவிந்ததால், நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனா். குறிப்பாக ஐயப்பன் கோயிலில் பிற்பகல் நடைசாத்தப்பட்ட பிறகும் கோயிலுக்கு வெளியே நூற்றுக்கணக்கான பக்தா்கள் வரிசையில் அமா்ந்தபடி மாலை நடை திறக்கும் வரை காத்திருந்து தரிசனம் செய்தனா். மாநகரில் உள்ள அனைத்து கோயில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.