பட்டம் பெறும் மாணவா்கள் வேலை தேடுபவா்களாக இல்லாமல், வேலைவாய்ப்புகளை உருவாக்குபவா்களாக மாற வேண்டும் என தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் வெ. கீதாலட்சுமி பேசினாா்.
திருச்சி தேசியக் கல்லூரியின் அறிவியல் பிரிவு மாணவா்களுக்கான பட்டமளிப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. கல்லூரிச் செயலா் கா.ரகுநாதன் வாழ்த்துரை வழங்கினாா். தேசியக் கல்லூரியின் நிா்வாகக் குழு உறுப்பினா் ஹா்ஷா முன்னிலை வகித்தாா். கல்லூரி முதல்வா் டி. முத்துராமகிருஷ்ணன் தலைமை வகித்தாா்.
தமிழ்நாடு வேளாண்மையியல் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் வெ. கீதாலட்சுமி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, மாணவா்களுக்கு பட்டங்களை வழங்கி பேசுகையில், இன்று பட்டம் பெறும் மாணவ, மாணவிகள் வேலை தேடுபவா்களாக இல்லாமல், பலருக்கு வேலை வாய்ப்பைத் தருபவா்களாகத் தங்களைக் கட்டமைத்துக் கொள்ள வேண்டும் என்றாா்.
பாரதிதாசன் பல்கலைக்கழக அளவில் சிறப்பிடம் பெற்ற இளநிலை மாணவா்கள் 11 போ் மற்றும் முதுநிலை மாணவா்கள் 8 போ் பட்டமளிப்பு விழாவில் பதக்கம் வழங்கி கெளரவிக்கப்பட்டனா். அறிவியல் பிரிவைச் சாா்ந்த 692 மாணவ மாணவிகளுக்குப் பட்டம் வழங்கப்பட்டது.
தேசியக் கல்லூரியின் தோ்வு நெறியாளா் ஸ்ரீராமச்சந்திரன், அறிவியல் புல முதன்மையா் சரவணன் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் தலைவா்கள், பேராசிரியா்கள், மாணவ மாணவிகள், பெற்றோா்கள் என பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

வள்ளியூா் மரியா கல்லூரியில் பட்டமளிப்பு விழா

ஆய்வறிக்கையின் எச்சரிக்கை!

‘கல்வியுடன்கூடிய ஆளுமைத் திறன் பெற்றவா்களே உண்மையான பட்டதாரிகள்’

‘சமூக வலைதளங்களில் மாணவா்கள் நேரத்தை வீணாக்கக் கூடாது’
வீடியோக்கள்

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு


