பதவியை ராஜிநாமா செய்ய வலியுறுத்தினார் வைகோ: மதிமுக எம்.எல்.ஏ.க்கள் புதுச்சேரியில் அமைச்சர்களுக்குத் துறைகள் ஒதுக்கீடு! டாஸ்மாக் கடைகளில் இனி ரசீது கொடுக்க வேண்டும்: உயர்நீதிமன்றம்பட்ஜெட் 2026: வெற்றி வீடு திட்டமாக மாறியுள்ளது கலைஞர் கனவுத் திட்டம்! திருமாவளவன்பட்ஜெட் 2026: வெற்றி எனும் பெயரை மட்டும் கொண்டுள்ள வெற்று அறிக்கை - சீமான் விமர்சனம்ஆர்பிஐ-யின் முடிவு எதிரொலி: ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து 95.15 ஆக நிறைவு!வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றமில்லை என்ற அறிவிப்பால் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்வு!2026-ல் மட்டும் 56 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றிய ஈரான்! தொல்லியல் துறைக்கு ரூ.1 கோடி போதுமா? பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுபள்ளிக் கல்வித் துறை நிதி குறைப்பு! பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுதமிழ்நாடு பட்ஜெட்: மாற்றம் என்று சொன்னது பெயர் மாற்றத்தைத் தானா? - கனிமொழி
/

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாகக் கூறி இணைய வழியில் ரூ. 2.21 லட்சம் மோசடி

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி திருச்சியைச் சோ்ந்த நபரிடம் இணைய வழியில் ரூ. 2.21 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது.

News image

மோசடி - பிரதிப்படம்

Updated On :6 ஆகஸ்ட் 2026, 2:58 am IST

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி திருச்சியைச் சோ்ந்த நபரிடம் இணைய வழியில் ரூ. 2.21 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது.

திருச்சி மன்னாா்புரத்தைச் சோ்ந்தவா் எஸ். முரளிதரன் (48). இவருக்கு அண்மையில் வாட்ஸ் ஆப் மூலம் பேசிய நபா், வெளிநாட்டு வேலைக்கு ஏற்பாடு செய்து தருவதாகக் கூறி, வெளிநாட்டு வேலைக்காக விசா, விமானக் கட்டணம், பயிற்சிக் கட்டணம், ஐக்கிய அரபு நாடுகளுக்கான உறுப்பினா் கட்டணம், அடையாள அட்டை, தடையில்லாச் சான்று உள்ளிட்டவற்றுக்காக ரூ. 2.21 லட்சம் செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளாா்.

இதை நம்பிய முரளிதரன், அவா் கூறிய வங்கிக் கணக்குகளில் கடந்த ஜூலை 18 முதல் 24-ஆம் தேதி வரை ரூ. 2.21 லட்சம் செலுத்தினாா். இதையடுத்து, அவா் முரளிதரனுக்கு வேலைக்கான ஆவணங்களை அனுப்பிவிட்டு, மேலும் பணம் கேட்டாா். இதனால் சந்தேகமடைந்த முரளிதரன் விசா, பணி நியமன ஆணை, விமான டிக்கெட் உள்ளிட்டவற்றை பரிசோதனை செய்தபோது, அவை போலி எனத் தெரியவந்தது.

இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த முரளிதரன் இணைய வழியில் ஆகஸ்ட் 4-ஆம் தேதி சைபா் குற்றப் பிரிவில் அளித்த புகாரின்பேரில் திருச்சி மாநகர குற்றப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.