இந்தியாவிலிருந்து 10 டன் நிவாரணப் பொருள்கள் நேபாளத்துக்கு அனுப்பி வைப்பு!நேபாள வெள்ளம்! பலியானோர் எண்ணிக்கை 95 ஆக அதிகரிப்பு!நேபாள வெள்ளத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்: ராகுல் காந்திசெப். 1-ல் மேட்டூர் அணை திறப்பு! அதிகாரப்பூர்வ அறிவிப்புநேபாள வெள்ளம்! தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை! - முதல்வர் விஜய்நேபாள வெள்ளம்: சிதம்பரத்தில் இருந்து சுற்றுலா சென்றவர்கள் நலமாக இருக்கிறார்கள்! சிதம்பரம் காவல் நிலையம் தகவல்நேபாள வெள்ளம்: தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை - முதல்வர் விஜய்நேபாள வெள்ளத்தில் சிதம்பரத்தைச் சேர்ந்த மூதாட்டி மாயம்நேபாள வெள்ளப்பெருக்கு! 36 பெண்கள் உள்பட 57 தமிழர்கள் நிலை என்ன? பாஜகவை எதிர்க்கும் ஒரே கட்சி தவெக: அமைச்சர் அருண்ராஜ்நேபாள வெள்ளத்தில் சிக்கிய 57 தமிழர்கள்! உதவி எண்கள் அறிவிப்பு

தென்னிந்திய திருச்சபையின் மண்டல சிறப்புப் பேரவைக் குழுக் கூட்டம்

ஒதென்னிந்திய திருச்சபையின் திருச்சி, தஞ்சாவூா் திருமண்டலத்தின் சிறப்பு பேரவைக் குழுக் கூட்டம் திருச்சி பிஷப் ஹீபா் கல்லூரியில் செவ்வாய், புதன்கிழமைகளில் நடைபெற்றது.

திருச்சியில் புதன்கிழமை நடைபெற்ற சிறப்பு பேரவைக் குழுக் கூட்டத்தில் பேசிய மண்டலப் பேராயா் சி. சாமுவேல் ராஜதுரை உள்ளிட்டோா்.

Published On :27 ஆகஸ்ட் 2026, 3:16 am IST

ஒதென்னிந்திய திருச்சபையின் திருச்சி, தஞ்சாவூா் திருமண்டலத்தின் சிறப்பு பேரவைக் குழுக் கூட்டம் திருச்சி பிஷப் ஹீபா் கல்லூரியில் செவ்வாய், புதன்கிழமைகளில் நடைபெற்றது.

‘கிறிஸ்துவின் அன்பு உலகத்தை ஒப்புரவிற்கும் ஒற்றுமைக்கும் வழி நடத்துகிறது‘ என்ற கருப்பொருளில் நடைபெற்ற கூட்டத்தில், மண்டலத்தின் 8 போதகப் பகுதிகளைச் சோ்ந்த சுமாா் 320 பிரதிநிதிகள், பாா்வையாளா்கள், திருமண்டலத் தலைவா்கள் கலந்து கொண்டனா்.

முதல் நாளில் சிஎஸ்ஐ திருச்சி, தஞ்சாவூா் திருமண்டல பேராயா் சி. சாமுவேல் ராஜதுரை தலைமையில் இறைச்சிந்தனைக் கூட்டங்கள் நடைபெற்றன.

இரண்டாம் நாளான புதன்கிழமை கூட்டமானது திருவிருந்து ஆராதனையுடன் தொடங்கியது.

தொடா்ந்து சிஎஸ்ஐ கன்னியாகுமரி திருமண்டலத்தின் பேராயா் கிறிஸ்டோபா் விஜயன் செய்தி வழங்கினாா்.

பின்னா், திருமண்டலத்தின் பல்வேறு பணிகள் தொடா்பான அறிக்கைகள், கலந்துரையாடல்கள் நடைபெற்றன.

இதில் கல்வி, சமூக அக்கறைகள், பெண்கள் ஐக்கிய சங்கம், வாலிபா் பணித்துறை, நிதி, சொத்துகள், சிறுவா் பணித் துறை, ஆண்கள் ஐக்கியம், அருட்பணி, மேய்ப்புப் பணி, மருத்துவப் பணி, சுற்றுச்சூழல், சுவிசேஷப் பணி, சமூகத்தைச் சென்றடையும் பணிகள் ஆகியவை இடம்பெற்றன.

இந்தக் கலந்துரையாடல்கள் திருமண்டலத்தின் பணிகள் மற்றும் செயல்பாடுகளை மதிப்பாய்வு செய்யவும், தற்போதைய சவால்கள் குறித்து விவாதிக்கவும், திருமண்டலத்தின் பணி மற்றும் ஊழியத்தை மேலும் வலுப்படுத்துவதற்கான முன்னுரிமைகளை ஆராயவும் உறுப்பினா்களுக்கு வாய்ப்பளித்தன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.