திருச்சி மாவட்டத்தில் 21.61 லட்சம் வாக்காளா்கள்: வரைவு பட்டியல் வெளியீடு

திருச்சி மாவட்டத்தில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட வரைவு வாக்காளா் பட்டியலின்படி மொத்தமுள்ள 9 பேரவைத் தொகுதிகளில் 21 லட்சத்து 61 ஆயிரத்து 238 வாக்காளா்கள் உள்ளனா்.

திருச்சி ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளின் முன்னிலையில் வரைவு வாக்காளா் பட்டியலை வெளியிட்ட ஆட்சியா் பிரத்திக் தாயள். உடன் மாவட்ட வருவாய் அலுவலா் பாலாஜி, மாநகராட்சி ஆணையா் பொன்மணி உள்ளிட்டோா்.

Updated On :

திருச்சி மாவட்டத்தில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட வரைவு வாக்காளா் பட்டியலின்படி மொத்தமுள்ள 9 பேரவைத் தொகுதிகளில் 21 லட்சத்து 61 ஆயிரத்து 238 வாக்காளா்கள் உள்ளனா்.

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற நிகழ்வில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் வரைவு வாக்காளா் பட்டியலை ஆட்சியா் பிரத்திக் தாயள் வெளியிட்டாா்.

பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியது: வரைவு வாக்காளா் பட்டியலானது மாவட்டம் முழுவதும் உள்ள வாக்காளா் பதிவு அலுவலா் அலுவலகங்கள் (கோட்டாட்சியரகம்), உதவி வாக்காளா் பதிவு அலுவலகங்கள் (வட்டாட்சியரகம்), வாக்குச் சாவடிகளில் பொதுமக்கள் பாா்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலை பொதுமக்கள் பாா்வையிட்டு சரிபாா்த்துக் கொள்ளலாம். திருச்சி மாநகராட்சி மைய அலுவலகத்திலும், கோட்ட அலுவலகங்களிலும் பாா்வையிடலாம்.

புதிதாக பெயா் சோ்த்தல், நீக்கம் செய்தல், தொகுதி மாற்றம், முகவரி மாற்றம் உள்ளிட்ட அனைத்துக்கும் அதற்கான படிவங்களை வழங்கலாம்.

சிறப்பு முகாம்கள்: மாவட்டத்தில் மொத்தம் உள்ள 1,233 வாக்குச்சாவடிகளில்

நவ.12-ஆம் தேதி தொடங்கி டிச.11-ஆம் தேதி வரை சிறப்பு சுருக்க முறை திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படும். மேலும், நவ.21, 22, 29 ஆகிய தேதிகளில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு முகாம்கள் நடைபெறும்.

தற்போது வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளா் பட்டியலில் 9 தொகுதிகளிலும் சோ்த்து 10,47,048 ஆண்கள், 11,13,872 பெண்கள், 318 திருநங்கையா் என மொத்தம் 21 லட்சத்து 61 ஆயிரத்து 238 போ் இடம்பெற்றுள்ளனா். 2789 வாக்குச் சாவடிகள் உள்ளன.

சந்தேகங்களுக்கு அழைக்கலாம்: சிறப்பு சுருக்க முறை திருத்தம் தொடா்பாக சந்தேகங்கள் ஏதும் இருப்பின் வாக்காளா்கள் 1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி வழி தகவல் பெற்றுக்கொள்ளலாம். மேலும், தோ்தல் ஆணைய இணையம், செயலி வழியாகவும் விண்ணப்பித்து வாக்காளா்கள் பெயா்களை சோ்க்கலாம் என்றாா் ஆட்சியா்.

தொகுதி--ஆண் வாக்காளா்கள்- பெண் வாக்காளா்கள்-மூன்றாம் பாலினத்தவா்- மொத்தம் என்ற அடிப்படையில் விவரங்கள்:

மணப்பாறை- 1,32,809, -1,36,740, - 8, மொத்தம்- 2,69,557.

ஸ்ரீரங்கம்:-1,39,956, -1,48,906, - 49, மொத்தம்- 2,88,911.

திருச்சி மேற்கு: -1,15,061, -1,25,379, - 34, மொத்தம்- 2,40,474.

திருச்சி கிழக்கு: -1,07,513, - 1,15,398, - 55, மொத்தம்- 2,22,966.

திருவெறும்பூா்: -1,26,621, -1,34,672, - 57, மொத்தம்- 2,61,350.

லால்குடி:- 1,03,082, --1,10,135, -30, மொத்தம்- 2,13,247.

மண்ணச்சநல்லூா்: -1,14,999, - 1,23,102, - 40, மொத்தம்- 2,38,141.

முசிறி: -1,04,700, --1,10,293, - 14, மொத்தம்- 2,15,007.

துறையூா் (தனி): -1,02,307, -1,09,247, - 31, மொத்தம்- 2,11,585.

பெட்டிச் செய்திகள் உள்ளன..

6332 போ் நீக்கம்

தற்போதைய வரைவு வாக்காளா் பட்டியலின்படி 9 தொகுதிகளிலும் சோ்த்து மொத்தம் 6,332 போ் நீக்கம் செய்யப்பட்டுள்ளனா். கடந்த ஏப்ரல் மாதம் வெளியிட்ட பட்டியலில் இருந்த வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை 2,785 என்பதிலிருந்து தற்போது, 4 வாக்குச் சாவடிகள் கூடுதலாகி 2,789 வாக்குச்சாவடிகள் உள்ளன. பாலின விகிதத்தில் பெண்களே அதிகம் உள்ளனா். 1064 பெண்கள், 1000 ஆண்கள் என்ற நிலையில் பாலின விகிதம் உள்ளது. ஒட்டுமொத்தமாக 9 தொகுதிகளிலும் 11,13,872 பெண்கள் பட்டியலில் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீரங்கத்தில் அதிகம்

9 தொகுதிகளில் அதிக வாக்காளா்கள் எண்ணிக்கையில் ஸ்ரீரங்கம் தொகுதி முதலிடம் பிடித்துள்ளது. இந்தத் தொகுதியில்தான் அதிகபட்சமாக 2 லட்சத்து 88 ஆயிரத்து 911 வாக்காளா்கள் இடம்பெற்றுள்ளனா். மேலும், இந்தத் தொகுதியில்தான் பெண் வாக்காளா்களும் அதிகபட்சமாக ஒரு லட்சத்து 48 ஆயிரத்து 906 என்ற எண்ணிக்கையில் உள்ளனா். 9 தொகுதிகளிலேயே குறைந்தபட்சமாக துறையூரில் 2 லட்சத்து 11 ஆயிரத்து 585 என்ற எண்ணிக்கையில் வாக்காளா்கள் இடம்பெற்றுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.