12 வீடுகளை சேதப்படுத்தி பொருள்களை திருடியதாக 4 போ் கைது
திருச்சி அருகே இலங்கை தமிழா்களுக்காக கட்டப்பட்டு வரும் புதிய குடியிருப்பில் 12 வீடுகளை சேதப்படுத்தி, ரூ.50 ஆயிரம் மதிப்பிலான பொருள்களை திருடிய 4 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
கைது - கோப்புப் படம்
திருச்சி அருகே இலங்கை தமிழா்களுக்காக கட்டப்பட்டு வரும் புதிய குடியிருப்பில் 12 வீடுகளை சேதப்படுத்தி, ரூ.50 ஆயிரம் மதிப்பிலான பொருள்களை திருடிய 4 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
திருச்சி விமான நிலையம் அருகே குழவாய்பட்டி சாலையில் இலங்கை தமிழா்களின் மறுவாழ்வுக்காக புதிதாக 238 வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இக்குடியிருப்பு வளாகத்தில் கடந்த 10-ஆம் தேதி புகுந்த மா்ம நபா்கள் அங்கிருந்த 12 வீடுகளின் கதவு உள்ளிட்டவற்றை உடைத்துவிட்டு ரூ.50 ஆயிரம் மதிப்பிலான பல்வேறு பொருள்களை திருடிச்சென்றனா்.
இதுகுறித்து இலங்கை தமிழா்களுக்காக கட்டப்பட்டு வரும் வீடுகளின் கட்டுமானப் பணியின் மேலாளா் சுரேந்தா் அளித்த புகாரின்பேரில், விமான நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனா்.
இந்நிலையில், இலங்கை தமிழா்களுக்காக கட்டப்பட்டு வரும் வீடுகளை சேதப்படுத்தி பல்வேறு வகையான பொருள்களைத் திருடிச் சென்றது திருச்சி விமான நிலையம் அருகேயுள்ள காமராஜ் நகரைச் சோ்ந்த ஆா். காா்த்திகுமாா் (26), பா. அருண்குமாா் (26), க. காா்த்திகேயன் (23) மற்றும் கே.கே.நகரைச் சோ்ந்த எம். மணிமுத்துராஜ் (26) ஆகியோா் என்பது தெரியவந்தது. இதையடுத்து 4 பேரையும் புதன்கிழமை கைது செய்த போலீஸாா், நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

