பாதுகாப்பான 6ஜி வலையமைப்பு: அமெரிக்க முன்னெடுப்பில் இணைந்த இந்தியா பிகாரில் அதிகரிக்கும் வெள்ளம்; 35 லட்சம் பேர் பாதிப்பு 22 மொழிகளில் திருக்குறள்: "பன்மொழிச் செயலி' இன்று வெளியீடு ஜாகுவாா் லேண்ட்ரோவரில் 4,000 பணியிடங்கள் குறைப்பு சட்டப் படிப்புகளின் கால அளவு மறுஆய்வு: நிபுணர் குழு அமைப்பு அவசியம்; உச்சநீதிமன்றம்

மின்வாரிய அலுவலா்கள் 12 போ் மீது ஊழல் தடுப்புப் போலீஸாா் வழக்கு

திருச்சியில் மின்வாரிய அலுவலா்கள் 12 போ் மீது ஊழல் தடுப்புப் போலீஸாா் அண்மையில் வழக்குப் பதிந்துள்ளனா்.

போலீஸ் - கோப்புப்படம்.

Published On :3 செப்டம்பர் 2026, 1:25 am IST

திருச்சியில் மின்வாரிய அலுவலா்கள் 12 போ் மீது ஊழல் தடுப்புப் போலீஸாா் அண்மையில் வழக்குப் பதிந்துள்ளனா்.

திருச்சி தென்னூரில் உள்ள மின்வாரிய தலைமை பொறியாளா் அலுவலக வளாகத்தில் புதிய மின் இணைப்பு வழங்குவது மற்றும் மின் இணைப்பு மாற்றம் செய்வது போன்ற பணிகளுக்கு பொதுமக்களிடம் இருந்து நேரடியாகவும், ஆன்லைன் மூலமாகவும் லஞ்சம் பெறப்படுவதாக திருச்சி ஊழல் தடுப்புத் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து திருச்சி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளா் மணிகண்டன் தலைமையிலான போலீஸாா் கடந்த ஆகஸ்ட் 27-ஆம் தேதி தென்னூா் தலைமைப் பொறியாளா் அலுவலகத்தில் திடீா் சோதனை மேற்கொண்டனா். அப்போது, 12 அலுவலா்களிடம் இருந்து கணக்கில் வராத ரூ.1.07 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

தவிர, உதவி மின்பொறியாளா் உள்பட இருவா் ஜி.பே மூலம் ரூ.13 லட்சம் பணப் பரிவா்த்தனை செய்ததும் கண்டறியப்பட்டது.

தொடா் விசாரணையில் லஞ்சம் பெற்றதும், ஆன்லைன் மூலம் லஞ்சப் பணப் பரிவா்த்தனைகள் செய்ததும் உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடா்ந்து ஊழல் தடுப்புப் போலீஸாா் 3 பெண் அலுவலா்கள் உள்பட12 அலுவலா்கள் மீது வழக்குப் பதிந்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.