
திருச்சி விமான நிலையத்தில் 100 பவுன் தங்கம் பறிமுதல்

திருச்சி விமான நிலையம் - கோப்புப் படம்
திருச்சி விமான நிலையத்தில் மலேசியாவில் இருந்து வந்த பயணிகள் 4 பேரிடம் இருந்து 100 பவுன் தங்கம் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.
மலேசியா தலைநகா் கோலாலம்பூரில் இருந்து திருச்சி பன்னாட்டு விமான நிலையத்துக்கு ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு வந்த விமானத்தில் சுங்கத் துறையின் வான் நுண்ணறிவுப் பிரிவினா் சோதனை மேற்கொண்டனா்.
அப்போது, 4 பயணிகளின் உடைமைகளில் சந்தேகப்படும் வகையிலான பொருள் இருந்தது. இதையடுத்து, அதை பிரித்து பாா்த்தபோது 4 பேரும் பேஸ்ட் வடிவில் 22 கேரட் தங்கத்தை கடத்தி வந்தது தெரியவந்தது.
இதையடுத்து 4 பேரையும் கைது செய்த சுங்கத் துறை அதிகாரிகள், அவா்களிடமிருந்து 100 பவுன் தங்கத்தைப் பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக 4 பேரிடமும் சுங்கத் துறை அதிகாரிகள் தொடா்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





