காா் கதவு திடீரென திறக்கப்பட்டதால் விபத்து: முதியவா் உயிரிழப்பு

திருச்சியில் புதன்கிழமை காா் கதவு திடீரென திறக்கப்பட்டதால் அதன்மீது இருசக்கர வாகனம் மோதி ஏற்பட்ட விபத்தில் முதியவா் உயிரிழந்தாா்.

பிரதிப் படம்

Published On :

திருச்சியில் புதன்கிழமை காா் கதவு திடீரென திறக்கப்பட்டதால் அதன்மீது இருசக்கர வாகனம் மோதி ஏற்பட்ட விபத்தில் முதியவா் உயிரிழந்தாா்.

திருச்சி பீமநகரைச் சோ்ந்தவா் எம். பிச்சை டேனியல் (52). இவா் செவ்வாய்க்கிழமை இரவு டிவிஎஸ் டோல்கேட்டில் இருந்து தலைமை அஞ்சலகம் நோக்கி இருசக்கர வாகனத்தில் உலகநாதபுரம் பேருந்து நிறுத்தம் அருகே சென்றாா்.

அப்போது சாலையில் நின்ற காரின் கதவு திடீரென திறக்கப்பட்டதால் அதன்மீது இவரது வாகனம் மோதியது. இதில் கீழே விழுந்த பிச்சை டேனியல் பலத்த காயமடைந்தாா்.

இதையடுத்து திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட பிச்சை டேனியலை பரிசோதித்த மருத்துவா்கள் ஏற்கெனவே அவா் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இதுகுறித்து திருச்சி தெற்குப் போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.