ஆம்பூர், செப்.7: ஆம்பூர் பஸ் நிலையம் அருகே நிற்க மேற்கூரை இல்லாததால் பஸ்ஸýக்காக காத்திருக்கும் பயணிகள் வெயில், மழையினால் அவதிபட்டு வருகின்றனர். நெடுஞ்சாலையின் குறுக்கே மேற்கூரை அமைக்க வேண்டும் என்பதே பயணிகளின் எதிர்பார்ப்பு.
ஆம்பூர் பஸ் நிலையம் நான்கு வழி தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ளது. தேசிய நெடுஞ்சாலை 4 வழிச் சாலையாக விரிவாக்கம் செய்வதற்கு முன் பெரும்பாலான பஸ்கள் ஆம்பூர் பஸ் நிலையத்துக்குள் சென்று வந்தன. வாணியம்பாடி மார்க்கமாக செல்லும் பஸ்கள் மட்டுமே தேசிய நெடுஞ்சாலையில் நின்று சென்றன.
தேசிய நெடுஞ்சாலை 4 வழிச் சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டு சாலையின் நடுவில் தடுப்பு வேலி அமைக்கப்பட்டது. இதனால் ஆம்பூரிலிருந்து சுற்றுப்புற கிராமங்களுக்கு செல்லும் நகரப் பஸ்கள், பேர்ணாம்பட்டு, குடியாத்தம், வேலூர், சென்னை செல்லும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் மட்டுமே ஆம்பூர் பஸ் நிலையத்துக்குள் சென்று வருகின்றன. வாணியம்பாடி மார்க்கமாக திருப்பத்தூர், சேலம், கிருஷ்ணகிரி, ஒசூர், பெங்களூர் உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லும் பஸ்கள் தேசிய நெடுஞ்சாலையிலேயே நின்று செல்கின்றன. இந்த பஸ்களுக்காக காத்திருக்கும் பயணிகள் வெயில் மற்றும் மழைக்கு ஒதுங்க இடமில்லாமல் அவதியுற்று வருகின்றனர்.
தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி ஆம்பூர் ரயில் நிலைய வளாகம் இருப்பதாலும், 4 வழிச் சாலையாக விரிவாக்கம் செய்த பிறகு தேசிய நெடுஞ்சாலையில் இடம் இல்லாததாலும் மேற்கூரை அமைக்கப்படவில்லையென கூறப்படுகிறது.
இதுகுறித்து நகர்மன்றத் தலைவர் வாவூர் நஜீர் அஹமத் கூறியது: மேற்கூரை அமைக்க அனுமதி வழங்க வேண்டும் எனக் கோரி தேசிய நெடுஞ்சாலை துறைக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை பதில் இல்லை என்றார்.
சென்னையில் உள்ளது போல ஆம்பூரிலும் சர்வீஸ் சாலையில் மேற்கூரை அமைக்க வேண்டும் என்பதே பயணிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 78.77% வாக்குப்பதிவு- நேரலை

மேற்குவங்க பாஜக எம்எல்ஏ கார் மீது கற்கள் வீசித் தாக்குதல்!

4 வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாற்றம்! மீண்டும் கோளாறு - காங்கிரஸ் புகார்!

பிரதமர் மோடியின் இரட்டைத் தோல்வி! எரிவாயு உற்பத்தி சரிவு, உரங்கள் தட்டுப்பாடு: கார்கே
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

