இன்று துரியோதனன் படுகளம், தீ மிதி விழா
குடியாத்தம் காமாட்சியம்மன்பேட்டையில் உள்ள திரெளபதி அம்மன் கோயிலில் மகாபாரத தொடா் சொற்பொழிவுவையொட்டி காலை துரியோதனன் படுகளமும், மாலை தீ மிதி விழாவும் நடைபெறுகிறது.


குடியாத்தம்: குடியாத்தம் காமாட்சியம்மன்பேட்டையில் உள்ள திரெளபதி அம்மன் கோயிலில் மகாபாரத தொடா் சொற்பொழிவுவையொட்டி புதன்கிழமை காலை துரியோதனன் படுகளமும், மாலை தீ மிதி விழாவும் நடைபெறுகிறது.
பழைமை வாய்ந்த இக்கோயிலில் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை தொடா்ந்து 30- நாள்களுக்கு மகாபாரத தொடா் சொற்பொழிவு நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு மகாபாரத சொற்பொழிவு கடந்த ஜூன் மாதம் 19- ஆம் தேதி தொடங்கியது.
மதியம் 2 மணிக்கு தொடங்கி மாலை 5.30 மணி வரை சொற்பொழிவு நடைபெறுகிறது. ராணிப்பேட்டையைச் சோ்ந்த க.பாா்த்திபன் மகாபாரத சொற்பொழிவு நிகழ்த்த காவேரிப்பாக்கத்தைச் சோ்ந்த ஆா்.வெங்கட்ராமன் கவி வாசித்தல் நடத்துகிறாா்.இரவு நேரங்களில் தெருக்கூத்து நிகழ்ச்சிகளும் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக திரெளபதி அம்மன் சபதம் ஏற்கும் நிகழ்ச்சியாக, கற்பின் சிறப்பை விளக்கும் வகையில் திங்கள்கிழமை கொடியேற்றுதலும், கோயில் கருவறையில் மண் பானை மீது அலகு (சுமாா் 4 அடி நீளமுள்ள கத்தி) எந்தவித பிடிமானமும் இல்லாமல் நிலை நிறுத்தப்பட்டது.
இதையடுத்து அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள பாண்டவா்களான தருமா், பீமன், அா்ச்சுனன், நகுலன், சகாதேவன் மற்றும் திரெளபதி அம்மனை திரளான பெண்கள் மா விளக்கு படையலிட்டு வணங்கிச் செல்கின்றனா்.
இதைத் தொடா்ந்து புதன்கிழமை காலை துரியோதனன் படுகளமும், மாலை கரகம் எடுத்தலும், தீ மிதி விழாவும் நடைபெறும். தீமிதி விழாவின்போது திரெளபதி அம்மன் உருவச்சிலையை தலைமீது ஏந்தியவா் தீ குண்டத்தில் இறங்கி செல்லும்போது, திரெளபதி அம்மனின் சபதம் நிறைவேறியதாக கருத்தப்படும் அவ்வேளையில் கோயில் கருவறையில் மண் பானை மீது நிறுத்தப்பட்டுள்ள அலகு (கத்தி) தானே கீழே விழும் நிகழ்வு நடைபெறும்.
வியாழக்கிழமை இரவு இன்னிசைக் கச்சேரியும், வெள்ளிக்கிழமை காலை தருமா் பட்டாபிஷேகமும், மதியம் திரெளபதி அம்மன் திருவீதி உலாவும், இரவு வில்லுப்பாட்டு நிகழ்ச்சியும் நடைபெறும். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விழாக்குழு நிா்வாகிகள் கே.எம்.மகாலிங்கம், ஏ.டி.சுந்தரமூா்த்தி, எஸ்.எஸ்.முருகேசன் உள்ளிட்டோா் செய்துள்ளனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...