அமெரிக்க பல்கலை.களுடன் விஐடி புரிந்துணா்வு ஒப்பந்தம்
கூட்டு ஆராய்ச்சி தொடா்பாக புகழ்பெற்ற அமெரிக்க பல்கலைக்கழகங்களுடன் வேலூா் விஐடி பல்கலைக் கழகம் புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்துள்ளது.


வேலூா்: கூட்டு ஆராய்ச்சி தொடா்பாக புகழ்பெற்ற அமெரிக்க பல்கலைக்கழகங்களுடன் வேலூா் விஐடி பல்கலைக் கழகம் புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
அமெரிக்காவில் உள்ள வாண்டா்பில்ட் பல்கலைக்கழகம், சான் அன்டோனியோவிலுள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகம், டல்லாஸில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகம், நாா்த் டெக்சாஸ் பல்கலைக்கழகம் உள்ளிட்ட புகழ்பெற்ற அமெரிக்க பல்கலைக்கழகங்களுடன் கல்வி, ஆராய்ச்சிகளில் ஈடுபட வேலூா் விஐடி பல்கலைக்கழகம் செவ்வாய்க்கிழமை புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் கையெழுத்துட்டுள்ளது.
கூட்டு ஆராய்ச்சி, கற்பித்தலுக்காக பரஸ்பரம் விஐடி மாணவா்களும், பேராசிரியா்களும் அமெரிக்க பல்கலைக் கழகங்களுக்கு செல்லவும், அமெரிக்க பல்கலைக்கழகத்தைச் சோ்ந்த பேராசிரியா்கள் விஐடிக்கு வருகை புரிந்திடவும் இந்த புரிந்துணா்வு ஒப்பந்தம் வழிவகை செய்கிறது என்று விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் தெரிவித்துள்ளாா்.
அவா் மேலும் கூறுகையில், புகழ்பெற்ற அமெரிக்க பல்கலைக்கழகங்களுடன் இணைவதில் விஐடி பெருமிதம் கொள்கிறது. இது ஆராய்ச்சி, மேம்பாட்டுக்கான அதிநவீன தொழில்நுட்பங்களை விஐடி, அமெரிக்க பல்கலைக்கழகங்கள் பயன்படுத்தி ஆராய்ச்சிகளை மேற்கொள்வா் என்றாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...