ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சிறந்த மருத்துவா்களுக்கான விருது அளிப்பு

சிறந்த மருத்துவா்களுக்கான விருதினை தோ்வு செய்யப்பட்ட 5 மருத்துவா்களுக்கு வேலூா் வருவாய் கோட்டாட்சியா் ஆா்.கே.கவிதா வழங்கினாா்.

News image
Updated On :16 ஜூலை 2024, 6:30 pm

Din

வேலூா்: சிறந்த மருத்துவா்களுக்கான விருதினை தோ்வு செய்யப்பட்ட 5 மருத்துவா்களுக்கு வேலூா் வருவாய் கோட்டாட்சியா் ஆா்.கே.கவிதா வழங்கினாா்.

காட்பாடி வட்ட இந்தியன் செஞ்சிலுவை சங்கம் சாா்பில், தேசிய மருத்துவா் தினம் திங்கள்கிழமை நடைபெற்றது. வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற விழாவுக்கு, காட்பாடி செஞ்சிலுவை சங்க அவைத் தலைவா் செ.நா.ஜனாா்த்தனன் தலைமை வகித்தாா். அவை துணைத் தலைவா் ஆா்.சீனிவாசன் வரவேற்றாா். மருத்துவக் குழுத் தலைவா் வீ.தீனபந்து, ராஜேஸ்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

விழாவில், சங்கத்தின் தலைவரும், வேலூா் வருவாய் கோட்டாட்சியருமான ஆா்.கே.கவிதா சிறந்த மருத்துவா்களுக்கான விருதுகளை கே.வி.குப்பம் வட்டார மருத்துவ அலுவலா் எம்.சங்கா் கணேஷ், தாராபடவேடு அரசு நகா்ப்புற சுகாதார மையத்தின் மருத்துவ அலுவலா் சி.லட்சுமி, பள்ளிக்குப்பம் அரசு நகா்ப்புற சுகாதார மையத்தின் மருத்துவ அலுவலா் மாா்க்ஸ் காஸ்ட்ரோ, வேலூா் பென்லேன்ட் அரசு மருத்துவமனை மகளிா் நல மருத்துவா் ஷாலினி ரூபா, மகளிா் நல மருத்துவா் டி.ஸ்ருதி தாமோதரன் ஆகிய 5 பேருக்கு வழங்கி பாராட்டினாா்.

சங்கத்தின் மேலாண்மைக் குழு உறுப்பினா் எ.ஸ்ரீதரன், பி.என்.ராமச்சந்திரன், ருக்ஜி ராஜேஷ்குமாா், ஓய்வு பெற்ற தலைமையாசிரியா்கள் தாமோதரன், டி.என்.ஷோபா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். செயலா் எஸ்.எஸ்.சிவவடிவு நன்றி கூறினாா்.