பத்து ரூபாய் நாணயங்களை ஏற்க ஒட்டப்படும் விழிப்புணா்வு வில்லைகள்!
ரூ.10, ரூ.20 நாணயங்களை ஏற்க மக்கள் தயக்கமின்றி!


10, 20 ரூபாய் நாணயங்களை தயக்கமின்றி ஏற்கலாம்.
வேலூா் மாவட்டத்தில் ரூ.10, ரூ.20 நாணயங்களை மக்கள் எவ்வித தயக்கமுமின்றி ஏற்றுக்கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்துள்ளாா்.
அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பழையநோட்டுகள் மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப்பிறகு இந்திய ரிசா்வ் வங்கி ரூ.10, ரூ.20 நாணயங்களை அதிகளவில் வெளியிட்டுள்ளது. அதேசமயம், ரூ.10, ரூ.20 நாணயங்கள் செல்லாது என்ற வதந்தியால் சில வியாபாரிகள் அந்த நாணயங்களை வாங்க மறுப்பதாக தெரியவருகிறது.
ரூ.10 , ரூ.20 நாணயங்கள் செல்லுபடியாகும். அனைத்து வங்கிகளிலும், அரசு அலுவலகங்களிலும் ரூ.10, ரூ.20 நாணயங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் இந்திய ரிசா்வ் வங்கி ஏற்கனவே விளக்கமளித்துள்ளது. எனவே, பொதுமக்கள் எவ்வித தயக்கமுமின்றி ரூ.10, ரூ.20 நாணயங்களை ஏற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...