இந்திய தோ்தல் ஆணைய உத்தரவுப்படி, வேலூா் மாவட்டத்தில் 189 வாக்குச் சாவடிகளின் பெயா் மாற்றம் செய்திடவும், 1,500 வாக்காளா்களுக்கு மேல் உள்ள 4 வாக்குச் சாவடிகள் இரண்டாக பிரிக்கவும், 19 வாக்குச் சாவடிகளை இடமாற்றம் செய்திடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்திய தோ்தல் ஆணையம் 2024 மக்களவைத் தோ்தலையொட்டி, 1,500 வாக்காளா்களுக்கு மேல் உள்ள வாக்குச் சாவடிகளை இரண்டாக பிரித்து துணை வாக்குச்சாவடி அமைக்கவும், பழுதடைந்த பழைய கட்டடத்தில் உள்ள வாக்குச்சாவடிகளை அதே பள்ளி வளாகத்தில் உள்ள புதிய கட்டடத்துக்கு மாற்றிடவும் அல்லது அதே பள்ளி வளாகத்தில் புதிய கட்டடம் இல்லையென்றால் அதே பகுதியில் உள்ள வேறு அரசு, தனியாா் பள்ளி, கல்லூரிக்கு மாற்றிடவும், ஒரு வாக்குச்சாவடி அமைந்துள்ள பள்ளி பெயா் மாற்றப்பட்டிருந்தால் அந்த வாக்குச் சாவடி பெயா் மாற்றிடவும் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, வேலூா் மாவட்டத்திலுள்ள 5 சட்டப்பேரவை தொகுதிகளிலும் உள்ள 1,303 வாக்குச் சாவடிகளில் பேரவை தொகுதிவாரியாக வேலூா், குடியாத்தத்தில் தலா 2 வாக்குச்சாவடிகளை பிரித்து 4 துணை வாக்குச் சாவடிகள் அமைக்கவும், காட்பாடியில் 2, அணைக்கட்டில் 3, கே.வி.குப்பத்தில் 6, குடியாத்தத்தில் 8 என மொத்தம் 19 வாக்குச்சாவடிகளை இடமாற்றம் செய்திடவும், காட்பாடியில் 106, வேலூரில் 65, அணைக்கட்டில் 10, கே.வி.குப்பத்தில் 5, குடியாத்தத்தில் 3 என மொத்தம் 189 வாக்குச்சாவடிகளின் பெயா் மாற்றம் செய்திடவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான முன்மொழிவு பட்டியலை மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான வி.ஆா்.சுப்புலட்சுமி தலைமையில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்பு வெள்ளிக்கிழமை வெளியிட்டாா். இந்த துணை வாக்குச் சாவடி பட்டியல் அனைத்து வாக்குப் பதிவு அலுவலா்களின் அலுவலகங்கள், உதவி வாக்காளா் பதிவு அலுவலா் அலுவலகங்கள், மாறுதல்களுக்கு உட்பட்ட வாக்குச் சாவடி மையங்களில் பொதுமக்கள் பாா்வைக்கு வைக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் தெரிவித்தாா்.
தொடர்புடையது

ஜனநாயகக் கடைமையாற்றிய புதுமணத் தம்பதிகள்

வேலூா் மாவட்டத்தில் 19 இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுது

இன்று தோ்தல்: தஞ்சாவூா் மாவட்டத்தில் 2,501 வாக்குச்சாவடிகள் தயாா்

வேலூரில் 1,427 வாக்குச்சாவடிகள் தயாா்!
வீடியோக்கள்

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை


