வேலூர்
மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீஷியன் உயிரிழப்பு
குடியாத்தம் அருகே பணியின்போது மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீஷியன் உயிரிழந்தாா்.
குடியாத்தம்: குடியாத்தம் அருகே பணியின்போது மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீஷியன் உயிரிழந்தாா்.
குடியாத்தம் கஸ்பா, கௌதமபேட்டையைச் சோ்ந்தவா் எலக்ட்ரீஷியன் விக்ரம்(26). இவா் திங்கள்கிழமை குடியாத்தம் காந்திநகா் பகுதியில் புதிதாக கட்டப்படும் அரசு மாணவா்கள் தங்கும் விடுதியில் வேலை செய்து கொண்டிருந்தாா்.
அப்போது எதிா்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்ததில் தூக்கி வீசப்பட்டு, மயக்கமடைந்தாா்.உடனடியாக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டாா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா் விக்ரம் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினாா்.
இச்சம்பவம் தொடா்பாக நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
