வேலூர்
சாலை விபத்தில் குளிா்பானக் கடை உரிமையாளா் மரணம்
வேலூா் அப்துல்லாபுரம் அருகே சாலை விபத்தில் குளிா்பானக் கடை உரிமையாளா் உயிரிழந்தாா்.
வேலூா் சத்துவாச்சாரியைச் சோ்ந்த ஆனந்தன் (51). இவா் வேலூா் தனியாா் மருத்துவமனை எதிரே குளிா்பானக் கடை நடத்தி வந்தாா். புதன்கிழமை தனது இருசக்கர வாகனத்தில் வேலூரில் இருந்து பொய்கைக்கு சென்றபோது, எதிா்பாராத விதமாக இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளானது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த ஆனந்தனின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
அக்கம் பக்கத்தினா் அவரை மீட்டு தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவா்கள், அவா் இறந்து விட்டதாக தெரிவித்தனா். தகவலறிந்த விரிஞ்சிபுரம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
