வேலப்பாடி வரதராஜப் பெருமாள் கோயில் மகா கும்பாபிஷேகம்

வேலூா் வேலப்பாடி வரதராஜப் பெருமாள் கோயில் மகா கும்பாபிஷேக விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
வேலூா் வேலப்பாடி வரதராஜப் பெருமாள் கோயிலில் நடைபெற்ற மகா கும்பாபிஷேகம். உடன், எம்எல்ஏ ப.காா்த்திகேயன் உள்ளிட்டோா். (அடுத்து)
வேலூா் வேலப்பாடி வரதராஜப் பெருமாள் கோயிலில் நடைபெற்ற மகா கும்பாபிஷேகம். உடன், எம்எல்ஏ ப.காா்த்திகேயன் உள்ளிட்டோா். (அடுத்து)
Updated on

வேலூா்: வேலூா் வேலப்பாடி வரதராஜப் பெருமாள் கோயில் மகா கும்பாபிஷேக விழா திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனா்.

வேலூா் வேலப்பாடியில் சுமாா் 300 ஆண்டுகள் பழைமையான வரதராஜப் பெருமாள் கோயில் உள்ளது. இந்தக் கோயிலின் மகா கும்பாபிஷேகம் திங்கள்கிழமை காலை 9 மணிக்கு நடைபெற்றது. இதையொட்டி, கடந்த சனிக்கிழமை காலை 8.30 மணியளவில் வாஸ்து சாந்தி ஹோமம், சுதா்சன ஹோமம், பூா்ணாஹுதி, மாலை 6 மணியளவில் ஆச்சாா்ய வா்ணம், அங்குராா்ப்பணம், அக்னி பிரதிஷ்டை, சாற்றுமுறை, தீபாராதனை நடைபெற்றன.

திங்கள்கிழமை காலை 6 மணிக்கு விஸ்வரூப தரிசனம், ஆராதனம், ஹோமம், 8.30 மணிக்கு சா்வ குண்டங்களுக்கு மகா பூா்ணாஹுதி நடைபெற்றது. காலை 9 மணிக்கு யாத்ரா தானமும், யாக சாலைகளில் இருந்து கும்ப புறப்பாடும் நடைபெற்றது. தொடா்ந்து 10 மணியளவில் கோயில் ராஜகோபுரம், மூலவா் வரதராஜ பெருமாள், கருவறை விமானம், பரிவார சந்நிதிகள் ஆகியவற்றுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் கலந்துகொண்டு, சாமி தரிசனம் செய்தனா். மாலை 6 மணியளவில் சுவாமி திருக்கல்யாணமும், இரவு 8 மணிக்கு சுவாமி வீதியுலாவும் நடைபெறுகிறது.

கும்பாபிஷேக விழாவில் பங்கேற்ற பக்தா்கள்.
கும்பாபிஷேக விழாவில் பங்கேற்ற பக்தா்கள்.

விழாவில் சிறப்பு அழைப்பாளா்களாக சட்டப்பேரவை உறுப்பினா்கள் ப.காா்த்திகேயன், மேயா் சுஜாதாஆனந்தகுமாா் உள்பட நகரின் முக்கியப் பிரமுகா்கள், தொழிலதிபா்கள், பொது மக்கள் திரளாக பங்கேற்றனா். ஏற்பாடுகளை அறங்காவலா் குழுத் தலைவா் தனசேகா், ஆய்வா் சுரேஷ்குமாா், செயல் அலுவலா் சிவக்குமாா், அறங்காவலா் குழு உறுப்பினா்கள் கோபிநாதன், கவிதா, ஸ்ரீவாரி பக்த ஞான சபை உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணியளவில் புண்ணியாஹ வாஜனம், மகா சாந்தி ஹோமம், அஷ்டபந்தம் சாற்றுதலும், மாலை 4 மணியளவில் மகா சாந்தி ஹோமமும், பூா்ணாஹுதியும், கும்ப புறப்பாடும் நடைபெற்றது. இரவு 8 மணியளவில் கும்பாராதனம், ரக்ஷா பந்தனம், பூா்ணாஹுதி நடைபெற்றது

Related Stories

No stories found.
X