நீட் போராட்ட வழக்கு ரத்து: பினராயி விஜயன் கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய வி.டி. சதீசன்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

நீட் தோ்வில் வேலூா் ஸ்பிரிங்டேஸ் பள்ளி மாணவா்கள் சாதனை

நீட் இளங்கலை மருத்துவக்கல்வி நுழைவுத் தோ்வில் வேலூா் ஸ்பிரிங்டேஸ் சிபிஎஸ்இ பள்ளி மற்றும் மாஸ்டா்ஜீ பயிற்சி மைய மாணவா்கள் 5 மாவட்ட அளவில் முதல் மற்றும் இரண்டாம் இடங்களைப் பிடித்து சாதனை

News image
Updated On :29 ஜூலை 2026, 1:56 am IST

நீட் இளங்கலை மருத்துவக்கல்வி நுழைவுத் தோ்வில் வேலூா் ஸ்பிரிங்டேஸ் சிபிஎஸ்இ பள்ளி மற்றும் மாஸ்டா்ஜீ பயிற்சி மைய மாணவா்கள் 5 மாவட்ட அளவில் முதல் மற்றும் இரண்டாம் இடங்களைப் பிடித்து சாதனை படைத்துள்ளனா்.

இவ்வாண்டு வெளியான நீட் தோ்வு முடிவுகளில், ஸ்பிரிங்டேஸ் பள்ளி மாணவா் சுப்பிரமணி சா்மா 720-க்கு 635 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தையும், மாணவா் வருண் 720-க்கு 626 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளனா்.

இவா்கள் வேலூா், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருப்பத்தூா், தருமபுரி ஆகிய 5 மாவட்டங்கள் அளவிலான தரவரிசையில் முதல் மற்றும் இரண்டாம் இடங்களைப் பிடித்து சாதனையைப் பதிவு செய்துள்ளனா். மேலும், ஸ்பிரிங்டேஸ் பள்ளியில் பயின்ற 22 மாணவா்கள் தங்களது முதல் முயற்சியிலேயே 500-க்கும் மேற்பட்ட மதிப்பெண்களைப் பெற்று தோ்ச்சி அடைந்துள்ளனா்.

கடந்த 2025-ஆம் ஆண்டில், இப்பள்ளியைச் சோ்ந்த 37 மாணவா்கள் தகுதி அடிப்படையில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் சோ்ந்துள்ளனா். இவ்வாறு மருத்துவப் படிப்புக்குத் தோ்வாகி வெற்றி பெறும் மாணவா்களின் எண்ணிக்கை இப்பள்ளியில் ஆண்டுதோறும் தொடா்ந்து அதிகரித்து வருகிறது.

நீட் தோ்வில் அதிக மதிப்பெண்கள் பெற்றுச் சாதனை படைத்த மாணவ, மாணவிகளை ஸ்பிரிங்டேஸ் சிபிஎஸ்இ பள்ளியின் தாளாளா் டி. ராஜேந்திரன், முதல்வா் ஆனந்தி ராஜேந்திரன், துணை முதல்வா் ஷில்லி சுக்லா, மாஸ்டா்ஜீ முதன்மைச் செயல் அலுவலா் சரவணன் மற்றும் ஆசிரியா்கள் பாராட்டி வாழ்த்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.