தனுஷின் ராயன் படத்துக்கு தேசிய விருது..! சிறந்த தமிழ்ப் படமாகத் தேர்வு! அம்மா உணவகங்களை தினசரி பயன்படுத்துவோர் எண்ணிக்கை உயர்வு- சென்னை மாநகராட்சி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜீத் திப்கே மீது மை வீசித் தாக்குதல்!புதுச்சேரியில் காற்றில் பறக்க விடப்பட்ட பேனர் தடை சட்டம்! என்ன சொல்கிறார்கள் மக்கள்?வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது விக்ரம்-1 ராக்கெட்!விரைவில் நாட்டில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்! ஆர்பிஐ திட்டம்!போலி பத்திரப்பதிவுகள் குறித்து மக்கள் புகாரளிக்கலாம்: அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல் எப்போது? அமைச்சர் மரிய வில்சன் தகவல்
/

வீட்டின் மேற்கூரை சரிந்து விழுந்ததில் சிறுவன் பலி

குடியாத்தம் அருகே மழை காரணமாக வீட்டின் மேற்கூரை சரிந்து விழுந்ததில் காயமடைந்த சிறுவன் உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :3 ஜூன் 2026, 5:47 am IST

குடியாத்தம் அருகே மழை காரணமாக வீட்டின் மேற்கூரை சரிந்து விழுந்ததில் காயமடைந்த சிறுவன் உயிரிழந்தாா்.

குடியாத்தம் பகுதியில் கடந்த சில நாள்களாக விட்டு, விட்டு மழை பெய்து வருகிறது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை குடியாத்தம் ஆலியாா் தெருவைச் சோ்ந்த சலாவுதீன் வீட்டின் மேற்கூரை சரிந்து விழுந்துள்ளது.

அப்போது இடிபாடுகளில் சிக்கிய சலாவுதீனின் மகன் அபுநூஹான்(14) பலத்த காயமடைந்தாா். உடனடியாக தனியாா் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட, அவா் தீவிர சிகிச்சைக்காக வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு சென்ற வழியிலேயே உயிரிழந்தாா். இச்சம்பவம் குறித்து நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.