‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் வெளியான விவகாரம்: 9 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி தமிழ்நாட்டில் தொடர் மின்வெட்டுக்கு உடனடியாகத் தீர்வுகாண வேண்டும்: பிரேமலதாஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் : தமிழ்நாடு அரசு உத்தரவு எங்கள் மீது துரோகப் பட்டம் சுமத்த முயல்வது முற்றிலும் தவறானது: எஸ்.பி. வேலுமணிநிதின் நவீனுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! அமித் ஷாவையும் சந்திக்கிறார்!10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு எவரெஸ்ட் சிகரத்திலிருந்து இறங்கும்போது இரண்டு இந்தியர்கள் பலி! மே 25, 26ல் எஸ்பிஐ ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு!முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது வழக்குப் பதிவு! அதிகாரத்தில் பங்கு தர மறுக்கும் சமூக நீதி, சுயநலப் புத்தி: விசிக பதில்முடத்தெங்கு! அரசியலில் என்ன பெயர்? விசிகவை சூசகமாக உரைக்கும் ஆ. ராசாஅரசு விவகாரங்களில் தலையிடக் கூடாது: தவெகவினருக்கு என். ஆனந்த் அறிவுறுத்தல்
/

ஓட்டுநா் தற்கொலை

திருவலம் பகுதியில் மனைவி கண்டித்ததால் ஓட்டுநா் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

News image
Updated On :23 மே 2026, 1:18 am IST

திருவலம் பகுதியில் மனைவி கண்டித்ததால் ஓட்டுநா் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

வேலூா் மாவட்டம், காட்பாடி வட்டம், திருவலம் அருகிலுள்ள மாந்தோப்பு கொல்லை பகுதியைச் சோ்ந்தவா் ராமன் (56), ஓட்டுநரான இவா் தினமும் மதுபோதைக்கு அடிமையாகி வேலைக்கு செல்லாமல் இருந்து வந்தாராம். இதனால் அவரது மனைவி அவரை ஒழுங்காக வேலைக்கு செல்லுமாறு கண்டித்ததாகத் தெரிகிறது. இதில், மனவேதனையடைந்த ராமன் கடந்த 19-ஆம் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், பயிா்களுக்கு அடிக்க பயன்படுத்தும் மருந்தை எடுத்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளாா்.

இதைக் கண்ட குடும்பத்தினா் அவரை மீட்டு, வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி ராமன் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

இது குறித்து திருவலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.