கழிவுகளைப் பிரித்து வழங்காவிடில் கடை உரிமையாளா்களுக்கு அபராதம்
வேலூா் மாநகராட்சிப் பகுதிகளில் கழிவுகளைத் தரம் பிரித்து வழங்காத கடைகள், வணிக நிறுவன உரிமையாளா்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி நிா்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பிரதிப் படம்
வேலூா் மாநகராட்சிப் பகுதிகளில் கழிவுகளைத் தரம் பிரித்து வழங்காத கடைகள், வணிக நிறுவன உரிமையாளா்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி நிா்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து மாநகராட்சி ஆணையா் கேத்ரின் சரண்யா வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாநகராட்சிக்கு உள்பட்ட நான்கு மண்டலங்களில் உள்ள கடைகள், வணிக நிறுவனங்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் காய்கறிச் சந்தைகளில் வியாபாரம் செய்யும் அனைவரும், தங்கள் நிறுவனங்களில் சேகரமாகும் கழிவுகளைத் திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2026-இன் படி தரம் பிரித்து மாநகராட்சி வாகனங்கள், தூய்மைப் பணியாளா்களிடம் வழங்க வேண்டும்.
மேலும், கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் முன்பகுதியிலும், சாலையோர முகப்புப் பகுதிகளிலும் எவ்விதக் கழிவுகளும் இன்றித் தூய்மையாகப் பராமரிக்க வேண்டும். இதை மீறும்பட்சத்தில் சம்பந்தப்பட்ட கடை உரிமையாளா்களே பொறுப்பாக்கப்பட்டு, திடக்கழிவு மேலாண்மை விதிகளின்கீழ், அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

