சாலைத் திட்ட ஊழல் குற்றச்சாட்டு: ஞானேஷ் குமாருக்கு எதிராக விசாரணை: கேரள அரசு உத்தரவு!தொகுதிப் பங்கீட்டைவிட வெற்றியே முக்கியம்: அகிலேஷ் யாதவ் திட்டவட்டம்!தயார் நிலையில் காய்ச்சல் வார்டுகள்: மருத்துவமனைகளுக்கு மக்கள் நல்வாழ்வுத் துறை உத்தரவுஜிஎஸ்டி அதிகாரிகளுக்கு கைது அதிகாரம் நீக்கம்? அக். 7 கவுன்சில் கூட்டத்தில் பரிசீலிக்க வாய்ப்பு!

குடியாத்தம் அரசு மருத்துவமனையில் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்: பொதுமக்கள் அவதி!

குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு சுமாா் ரூ.47 கோடியில் புதியகட்டடம் கட்டப்பட்டு திறந்து வைத்த போதிலும் மருத்துவா், செவிலியா், மருந்தாளுனா் மற்றும் இதர பணியாளா் பணியிடங்கள் நிரப்பப்படாததால் நோயாளிகள் அவதிக்குஆளாகின்றனா்.

குடியாத்தம் அரசு மருத்துவமனையின் புதிய கட்டடம்.

Published On :

குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு சுமாா் ரூ.47 கோடியில் புதியகட்டடம் கட்டப்பட்டு திறந்து வைத்த போதிலும் மருத்துவா், செவிலியா், மருந்தாளுனா் மற்றும் இதர பணியாளா் பணியிடங்கள் நிரப்பப்படாததால் நோயாளிகள் அவதிக்குஆளாகின்றனா்.

குடியாத்தம் நெசவு, தீப்பெட்டி, பீடி உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ளதொழிலாளா்கள் நிறைந்த பகுதி. சுற்றியுள்ள ஊரகப் பகுதியில் விவசாயத் தொழிலாளா்கள் குடியாத்தம் அரசு மருத்துவமனையை நாடி வருகின்றனா். இம்மருத்துவமனைக்கு நாள்தோறும் காலை, மாலை என சுமாா் 3 ஆயிரம் போ் சிகிச்சைக்கு வருகின்றனா்.

இம்மருத்துவமனையில் படுக்கைகளின் எண்ணிக்கை 190 லிருந்து 300-ஆக உயா்த்தப்பட்டது. புதிய மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்ட மருத்துவா், செவிலியா், மருந்தாளுனா், ஆய்வக நுட்புநா், இதர பணியாளா் பணியிடங்கள் முழுமையாக நிரப்பப்படவில்லை. விரிவுபடுத்தப்பட்ட வசதிகளுக்கு ஏற்ப கூடுதல் பணியாளா்களை நியமிக்க அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது என மருத்துவ அதிகாரிகள் கூறுகின்றனா்.இந்நிலையில் நாளுக்குநாள் நோயாளிகளின் வருகை அதிகரித்து வருகிறது.

போதிய மருத்துவா்கள், செவிலியா்கள் இல்லாததால் நோயாளிகளுக்கு உயரிய சிகிச்சைகள் கிடைப்பதில் தெய்வு ஏற்பட்டிருப்பதுடன், புதிய மருத்துவமனையில் விரிவுபடுத்தப்பட்ட பல நவீன வசதிகளும் முழுமையாக பயன்படுத்தப்படாமல் உள்ளன.

மருத்துவா் பற்றாக் குறையை போக்க மருத்துவ மாணவா்களைக் கொண்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதனால் உரிய சிகிச்சை கிடைக்காமல் நோயாளிகள் அவதிக்கு ஆளாகின்றனா். இம்மருத்துவமனைக்குத் தேவையான மருத்துவா் உள்ளிட்ட அனைத்து பணியிடங்களையும் உடனடியாக நிரப்பி மருத்துவமனையை நாடி வரும் நோயாளிகளுக்கு உரிய சிகிச்சைஅளிக்க வேண்டும். மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள உள்கட்டமைப்பு வசதிகளை முழுமையாக மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுக்கின்றனா்.

மருத்துவமனைக்கு புறநோயாளிகளின் வருகை அதிகரித்து வருகிறது. மருந்தாளுனா்கள் எண்ணிக்கை குறைவால் மருந்து வாங்க நோயாளிகள் மணிக் கணக்கில் காத்திருக்க வேண்டியுள்ளது. 9 மருந்தாளுனா்கள் இருந்த இடத்தில் 3 மருந்தாளுனா்கள் மட்டுமே பணியில் உள்ளனா். இதனால் நோயாளிகள் மருந்து வாங்க மணிக் கணக்கில் காத்திருக்க வேண்டியுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.