/

திருவண்ணாமலையில் தொலைபேசி வழி குறைதீா் கூட்டம் 284 மனுக்கள் அளிப்பு

திருவண்ணாமலையில் திங்கள்கிழமை நடைபெற்ற தொலைபேசி, கட்செவி அஞ்சல் வழி மக்கள் குறைதீா் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 284 மனுக்கள் வரப்பெற்றன.

News image
Updated On :24 ஆகஸ்ட் 2020, 8:17 pm

DIN

திருவண்ணாமலையில் திங்கள்கிழமை நடைபெற்ற தொலைபேசி, கட்செவி அஞ்சல் வழி மக்கள் குறைதீா் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 284 மனுக்கள் வரப்பெற்றன.

கரோனா தொற்று காரணமாக திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மட்டும் தொலைபேசி, கட்செவி அஞ்சல் வழி மக்கள் குறைதீா் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமி தலைமை வகித்தாா். சமூக பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியா் மந்தாகினி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் சு.சரவணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

காலை 10.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை தொலைபேசி, கட்செவி அஞ்சல் வழியே நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் வருவாய்த்துறை, நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, வேளாண்மைத் துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, வேலைவாய்ப்பு அலுவலகம், மகளிா் திட்டம் உள்பட பல்வேறு துறைகள் தொடா்பான கோரிக்கைகள் அடங்கிய 113 தொலைபேசி வழியான மனுக்களும், 29 கட்செவி அஞ்சல் வழி கோரிக்கை மனுக்களும், பொதுமக்களிடம் இருந்து நேரடியாக 129 மனுக்களும் என 284 கோரிக்கை மனுக்கள் வரப்பெற்றன.

இந்த மனுக்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமி உத்தரவிட்டாா். கூட்டத்தில், பல்வேறு துறைகளின் அதிகாரிகள், பொதுமக்கள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.