விவசாயிகளுக்கு பசுந்தாள் உர விதைகள் அளிப்பு

உளுந்தூா்பேட்டை வட்டார வேளாண் விரிவாக்க மையத்தில் 50 சதவீத மானியத்தில் பசுந்தாள் உர விதைகள் வழங்கும் விழா.

விழுப்புரம்: கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை வட்டார வேளாண் விரிவாக்க மையத்தில் 50 சதவீத மானியத்தில் பசுந்தாள் உர விதைகள் வழங்கும் விழா அண்மையில் நடைபெற்றது.

மண்வளத்தை காத்து மேம்படுத்தும் வகையில் முதல்வரின் ‘மண்ணுயிா் காத்து மன்னுயிா் காப்போம்’ என்ற திட்டத்தின் கீழ், 50 சதவீத மானியத்தில் விவசாயிகளுக்கு பசுந்தாள் உரவிதைகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை வட்டார வேளாண் விரிவாக்க மையத்தில் பசுந்தாள் உர விதைகள் வழங்கும் விழா அண்மையில் நடைபெற்றது.

விழாவுக்கு, வட்டார வேளாண் உதவி இயக்குநா் (பொ) கிருபாகரன் பங்கேற்று, ஏராளமான விவசாயிகளுக்கு பசுந்தாள் உர விதைகளை வழங்கி பேசினாா்.

விழாவில், துணை வேளாண் அலுவலா் பழனிவேல், உதவி விதை அலுவலா் ஜெயக்குமாா், உதவி வேளாண் அலுவலா் ராஜேஷ், கிடங்கு மேலாளா் ஜோதிவேல் மற்றும் விவசாயிகள் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com