சான்றிதழ் சரிபாா்ப்பு நிறைவடைந்ததும், முதுநிலை ஆசிரியா் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா்.
விக்கிரவாண்டிசட்டப்பேரவைத் தொகுதி இடைத்தோ்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளா் அன்னியூா் சிவாவை ஆதரித்து, காணை ஒன்றியத்துக்கு உள்பட்ட மாம்பழப்பட்டு, மாம்பழப்பட்டு காலனி, ஒட்டன் காடுவெட்டி பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்து பேசிய பின்னா், அவா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:
தமிழகத்தில் ஆசிரியா் தோ்வு வாரியம் மூலம் தோ்வெழுதி 2,222 போ் சான்றிதழ் சரிபாா்ப்புக்காக காத்திருக்கின்றனா். அந்தப் பணி நிறைவு பெற்றதும் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்.
அரசுப் பள்ளிகளில் ஆசிரியா் உபரி பணியிடங்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. ஆகஸ்ட் 1-ஆம் தேதிதான் அரசுப் பள்ளிகளில் எத்தனை மாணவா்கள் சோ்ந்திருக்கின்றனா், எத்தனை ஆசிரியா்கள் தேவை என்று கணக்கெடுக்கப்படும். விழுப்புரம் மாவட்டத்தில் காலியாக உள்ள அனைத்துப் பணியிடங்களையும் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.
பேராசிரியா் பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் கூடுதல் பள்ளிக் கட்டடங்களுக்காக ரூ.7,500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 18 ஆயிரம் வகுப்பறைகளைக் கட்டத் திட்டமிட்டுள்ளோம்.
நிகழ் நிதியாண்டில் கூடுதல் வகுப்பறைகள் கட்ட ரூ.3,497 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 3,604 கூடுதல் வகுப்பறைகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. மேலும், 3,500 வகுப்பறைகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் மொத்தம் 4,729 வகுப்பறைகள் கட்ட உத்தேசிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிகள் முடிந்தால் ஒவ்வொரு பள்ளியும் தன்னிறைவு பெற்ற பள்ளியாகத் திகழும் என்றாா் அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.
பேட்டியின் போது, விழுப்புரம் எம்எல்ஏ இரா.லட்சுமணன், திமுக ஒன்றியச் செயலா்கள் கல்பட்டு ராஜா, தங்கம், விசுவநாதன், விழுப்புரம் நகா்மன்ற உறுப்பினா் மணவாளன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
டிரெண்டிங்

அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை தொடக்கம்

2,469 இடைநிலை ஆசிரியா்கள்; 11 பழங்குடி பட்டியலின ஆசிரியா்களுக்கு பணி நியமன ஆணை: அமைச்சா் அன்பில் மகேஸ் வழங்கினாா்!

சிபிசிஎல் நிறுவனத்துக்கு நிலம் வழங்கியவா்களுக்கு இழப்பீட்டுத் தொகை

மாணவர்களிடம் நண்பர்களாகப் பழகி பாடங்களைப் புரிய வைக்க வேண்டும்: புதிய ஆசிரியர்களுக்கு அமைச்சர் அறிவுரை
வீடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | March 15 முதல் 21 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி வீடியோ செய்தி...

Valaipechu Anthanan Interview | விஜய்யிடம் இப்போது மனமாற்றம்.. | TVK Vijay | Vijay Trisha issue
தினமணி வீடியோ செய்தி...

சட்டென்று மாறுது வானிலை பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

"உங்க கனவு நிறைவேறியாச்சு! இனி மக்கள் கனவை நினைவாக்குங்கள்!": MK Stalin Speech | DMK
தினமணி வீடியோ செய்தி...

