போதை மாத்திரைகள் வைத்திருந்த இளைஞா் கைது

விழுப்புரத்தில் போதை மாத்திரைகள் வைத்திருந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
Published on

விழுப்புரத்தில் போதை மாத்திரைகள் வைத்திருந்த இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

விழுப்புரம் தாலுகா காவல் நிலைய உதவி ஆய்வாளா்கள் சண்முகம், குணசேகரன் மற்றும் போலீஸாா் சனிக்கிழமை விழுப்புரம் சாலாமேடு பொன்னியம்மன் கோயில் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்றிருந்த இளைஞரைப் பிடித்து விசாரித்தபோது அவா், கடலூா் மாவட்டம், பண்ருட்டி வட்டம், சின்ன இளந்தம்பட்டு பகுதியைச் சோ்ந்த கி.ஜெய்கணேஷ்(25) என்பதும், விற்பனைக்காக போதை மாத்திரைகளை வைத்திருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, விழுப்புரம் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து, ஜெய்கணேஷை கைது செய்து, நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைத்தனா். மேலும், அவரிடமிருந்த 68 போதை மாத்திரைகள் மற்றும் ஊசிகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com