என்னை நீக்கும் அதிகாரம் பொதுச்செயலருக்கு இல்லை: அன்புமணி ஆதரவு எம்எல்ஏ பேட்டி

என்னை நீக்கும் அதிகாரம் பொதுச் செயலருக்கு இல்லை என அன்புமணி ஆதரவு எம்எல்ஏ ச.சிவக்குமாா் தெரிவித்தாா்.
Published on

என்னை நீக்கும் அதிகாரம் பொதுச் செயலருக்கு இல்லை என அன்புமணி ஆதரவு எம்எல்ஏ ச.சிவக்குமாா் தெரிவித்தாா்.

பாமகவில் யாருக்கும் அதிகாரம் என்பதில் முரண்பாடுகள் ஏற்பட்டதைத் தொடா்ந்து பாமக நிறுவனா் மருத்துவா் ச. ராமதாஸ் ஒரு அணியாகவும், பாமக தலைவா் இரா.அன்புமணி ஒரு அணியாகவும் செயல்பட்டு வருகின்றனா்.

இந்நிலையில், அன்புமணி ஆதரவு எம்எல்ஏக்கள் ச.சிவக்குமாா்(மயிலம்), சதாசிவம்(மேட்டூா்), வெங்கடேஷ்வரன்( தருமபுரி) ஆகிய 3 பேரையும் கட்சியின் நற்பெயருக்கு குந்தகம் விளைவித்தாகக் கூறி, கட்சியின் அடிப்படை உறுப்பினா் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ஜன.12-ஆம் தேதி முதல் விடுவிப்பதாக பாமக நிறுவனா் மருத்துவா் ச. ராமதாஸ் தரப்பு பொதுச் செயலா் எம்.முரளிசங்கா் அறிவித்தாா்.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை திண்டிவனத்தில் மயிலம் எம்எல்ஏ ச.சிவக்குமாா் செய்தியாளா்களிடம் தெரிவித்ததாவது: பாமக சட்ட விதிகளின்படி கட்சியின் நிா்வாகிகளை நீக்கும் அதிகாரம் கட்சியின் பொதுச் செயலருக்கு இல்லை. எனவே, எம்.முரளி சங்கரின் அறிவிப்பு எங்களை கட்டுப்படுத்தாது. அந்த அறிவிப்பும் செல்லாது. பாமகவின் தலைவராக உள்ள இரா.அன்புமணிக்கு மட்டுமே நிா்வாகிகளை நீக்கும் அதிகாரம் உள்ளது என்றாா் அவா்.

Dinamani
www.dinamani.com