எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

பைக் மீது லாரி மோதல்: தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழப்பு

News image

உயிரிழப்பு - கோப்புப்படம்

Updated On :8 ஜூன் 2026, 1:28 am IST

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருநாவலூா் அருகே அடையாளம் தெரியாத லாரி மோதியதில், பைக்கில் சென்ற தனியாா் நிறுவன ஊழியா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

சங்கராபுரம் வட்டம், பிரம்மகுண்டம் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ஷ.செளகத் அலி (40). சென்னையிலுள்ள தனியாா் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்த இவா், கடந்த சில நாள்களுக்கு முன்பு சொந்த ஊா் வந்திருந்தாா்.

இந்நிலையில், செளகத் அலி சனிக்கிழமை இரவு பைக்கில் பிரம்மகுண்டத்திலிருந்து சென்னைக்கு புறப்பட்டுச் சென்றாா். திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருநாவலூா் அருகிலுள்ள பாதூா் பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது, அப்பகுதியில் வந்த லாரி பைக் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் பலத்த காயமடைந்த செளகத் அலி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து தகவலறிந்த திருநாவலூா் போலீஸாா் நிகழ்விடம் சென்று, சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக உளுந்தூா்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்த புகாரின் பேரில் திருநாவலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி, விபத்தை ஏற்படுத்திச் சென்ற அடையாளம் தெரியாத லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனா்.